search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து கம்பெனி வேலைகளிலும் புகுந்தனர்  கடலூர் மாவட்டத்துக்கு திரளும் வடமாநில வாலிபர்கள் நகர் பகுதியில் வீட்டு வாடகை உயர்ந்தது
    X

    அனைத்து கம்பெனி வேலைகளிலும் புகுந்தனர் கடலூர் மாவட்டத்துக்கு திரளும் வடமாநில வாலிபர்கள் நகர் பகுதியில் வீட்டு வாடகை உயர்ந்தது

    • தொழிற்சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் இயற்கை வளம் மிகுந்த பகுதியாகும். இங்கு ஆண்டு தோறும் பருவகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவேதான் இங்கு ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. இது தவிர பண்ருட்டி நகரம் பலாப்பழம், முந்திரிக்கு புகழ்பெற்றது. எனவே தான் ஏராளமான பலாப்பழ மண்டிகள், முந்திரி தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் வேலைபார்த்து வந்தனர். இதுபோக கடலூர் நகரின் தெற்கு பகுதியில் குடிகாடு, காரைக்காடு பகுதியில் சிப்காட் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகி வெளி மாநி லங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    எனவே இந்த தொழிற் சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். ஆனால் நாளடைவில் முந்திரி, பலாப்பழ மண்டி, சிப்காட் தொழிற்சாலைகளை வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு உள்ள அனைத்து கம்பெனிகளும் வடமாநில இளைஞர்களே வேலை பார்த்து வருகிறா ர்கள். இவர்கள் குறைந்த சம்ப ளத்தில் அதிகநேரம் வேலை பார்ப்பதால் கம்பெனி உரி மையாளர்களும் வடமாநில தொழிலாளர்களை வரவேற்கின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். உதாரண மாக தமிழக வாலிபர்கள் கூடுதல் சம்பளம், குறைந்த நேரத்தில் பணி செய்வதற்கு கறார் செய்வ தால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளதாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மாவட்டத்தில் உள்ள மளிகைகடை, ஜவுளிக்கடை, கட்டிட வேலை உள்ளிட்ட நிறுவனங்களையும் வட மாநில தொழிலாளர்கள் புகுந்து வேலைபார்த்து வருகிறார்கள். மேலும் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் பானிபூரி, பஞ்சுமிட்டாய், போர்வைகள், தலையணை கள், படுக்கை விரிப்புகள், வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த தொழில்களை பார்ப்பதற்காக மேலும் ஆயிரக் கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர். இவர்களால் கடலூர் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதியில் வீட்டு வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு ஒரு வீட்டுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்றி ருந்தால். வடமாநில தொழிலாளர்கள் வந்த உடன் அந்த வாடகை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே வீட்டில் 8 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இதுபோன்ற நிலை உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழக நடுத்தர குடும்பத்தி னர் வாடகை வீடு கிடைக்காமல் திணறிவருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சுமார் 1.50 கோடி வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ள தாக தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழு வதும் பரந்து விரிந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதுபோன்ற நிலை நீடித்தால் கடலூர் மாவட் டத்தையே வடமாநில தொழி லாளர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி வட மாநில தொழி லாளர்கள் எந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற வடமாநில தொழிலாளர்களால் பல்வேறு குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சிப்காட் வேலை தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் கொலையில் முடிந்துள்ளது. மேலும் பல்வேறு வீடுகளிலும் வியாபாரம் செய்வதுபோல் நடித்து கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே போலீசாரும் இந்த விச யத்தில் தனிகவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×