என் மலர்
செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீரனூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கீரனூர் பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
கீரனூர்:
கீரனூர் பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் குன்றாண்டார் கோவில் வட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சவுரியம்மாள் தலைமை தாங்கினார். சீதாலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் இந்திராணி, செயலாளர் பச்சையம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் சரோஜா நன்றி கூறினார்.
Next Story






