search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ockhi storm"

    நாகர்கோவில் இலுப்பையடி காலனியில் ஒகி புயலால் வீடுகளை இழந்த 8 பேருக்கு புதிய வீடுகளை வசந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் போது கடுமையான சேதங்கள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகளில் மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. ஆயிரக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் தென்னைந் தோப்புகள் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில், கோட்டார், இலுப்பையடி காலனியில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அந்த பகுதி மக்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ. விடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று தனது சொந்த நிதியில் இருந்து 8 புதிய வீடுகளை அந்த பகுதியில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. அமைத்து கொடுத்தார்.

    மேலும் அந்த பகுதிக்கு செல்லும் சாலையும் சீர் செய்யப்பட்டது. வீடுகள், சாலை திறப்பு விழா நாகர்கோவில் இலுப்பையடி காலனியில் நடைபெற்றது. வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வீடுகளை திறந்து வைத்தார். வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, ஆமோஸ், காங்கிரஸ் மகளிரணி தலைவர் தங்கம் நடேசன், கிறிஸ்டி ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×