என் மலர்
நாகப்பட்டினம்
- அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், திருப்புகலூர், கணபதிபுரம், ஏர்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓ.என்.ஜி.சி நிர்வாகம் மூலம் டேக்வாண்டோ பயிற்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோ னா பாதிப்பினால்இரண்டு வருடங்களாக தடைப்ப ட்டிருந்த இப்பயிற்சி தற்போது திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ -மாணவி களுக்கு அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும்பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்க ங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சிக்குபள்ளி யின் தலைமை ஆசிரிய ர்நிர்ம லாராணி, உதவித லைமை ஆசிரியர்சங்கர் முன்னிலையில் டேக்வா ண்டோ பயிற்சி யாளர் மாஸ்டர் பாண்டியன் பயிற்சி அளித்தார்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
- நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு வட்டாரதலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். துணைசெ யலாளர்கள் ராஜரத்தினம் ,சக்திதா சன், செயற்குழு உறுப்பி னர் அய்யாதுரை, துணை த்தலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட பொரு ளாளர் ஜெயம் நன்றி கூறினார்.
- கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், சோழவித்யா புரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழா கொடியே ற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட அதிபர் பன்னீ ர்செல்வம் தலைமையில் ஜெபமாலை, மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதை தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.கொடியேற்ற நிகழ்வில் சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவர் மரியசூசை, சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் கிறிஸ்துவ சமூதா யத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனாளிகளில் 382 பயனாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினார்.
- வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றிய த்தில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு திட்ட த்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்குநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கள ஆய்வு அட்டை வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேதார ண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், பாஸ்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதிஆகியோர் கலந்துகொண்டு கத்ததிரி புலம், ஆதனூர், கருப்பம்புலம் ,குரவப்புலம், உள்ளிட்ட 36 ஊராட்சிகளில் 21- 22 ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனளிகளில் 382 பயணாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினர். வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வை பெற எனவும், திட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் ஊரக வளர்ச்சி இயக்கம் குறைய தீர்ப்பு மைய தொடர்பு எண்கள் 8925422215, 8925422216 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதி தெரிவித்துள்ளார்.
- விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
- பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு மாணவிகளுக்கான பாதுகாப்பு, உரிமைகள் குறித்து பேசினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யாகுரு குலம் பெண்கள்மேல்நிலை ப்பள்ளியில் குழந்தை களுக்கான சட்ட பாதுகா ப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமை கள் குறித்தான கலந்து ரையாடல் நிகழ்ச்சி குருகுலம் நிர்வாக அறங்கா வலர் கயிலை மணி வேதர த்தனம் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் சரண்யா ஜெயக்கு மார், வேதாரண்யம் நீதிம ன்ற நீதிபதி (பொ) தீப்கா, வக்கீல் பாரிபாலன், துணை தாசில்தார் ராஜா உட்பட பலர் மாணவிகளுக்கான சட்ட பாதுகாப்பு, உரிமைகள், குறித்து பேசினர்.
- பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது.
- சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக அந்த இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இங்கு சுரங்கபாதை அமைக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் மறுத்த விட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுதல், பிணம் கொண்டு செல்லுதல் மற்றும் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தினர். தற்போது சுரங்கபாதை அமைக்காமல் ெரயில்வே பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக வேதா ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், துணை போலீஸ் சூப்பி ரண்டு முருகவேல் ஆகியோர் அப்பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட முயற்சி எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்ததால் மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
- பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
- கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கேட்டறிந்து 31 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கீதா, நகர இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தியாகராஜன், சிவராமன், ஆனந்தராஜ், பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அகல ரெயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.
- நாகை ெரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை - வேளாங்கண்ணி இடையே சுமார் 10 கி.மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண் இறுகும் தன்மையற்றதாக இருந்ததால், இத்தடத்தில் 30 கி.மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால், 10 கி.மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியது.
இந்நிலையில், இந்தப்பாதையின் தரத்தை மேம்படுத்தி, ரெயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியும், அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைப்பெற்று வந்தது.இந்த நிலையில், இத்தடத்திலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு நாகை ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து அதிவேக ரயிலை இயக்கி வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் வேக சோதனை ரயில் அடுத்த 15 நிமிடங்களில் நாகையை வந்தடைந்தது.
- காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கி துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
- சொர்ணகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் பழமை வாய்ந்த சொர்ணகாளி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையில் ஆண்டு பெரு விழா நடைபெறுவதுவழக்கம். அதன்படி இந்த ஆண்டு க்கான பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
காளி போன்று வேடமிட்ட பக்தர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடி முன்னே செல்ல அதற்கு ஏற்ப காளி நடனமிடம் திருநடன காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து காளி அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் தத்ரூபமாக நடைபெற்றது. முன்னதாக சொர்ணகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- வன்முறையாக வெடித்து பள்ளிவாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது.
- மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்கு–லத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளி–யில் விடுதியில் தங்கி படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க கோரியும், பள்ளியை இழுத்து மூட வலியுறுத்தியு ம்தொடர்ச்சியாக 4 நாட்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும்எடுக்காததால் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்து பள்ளிவாகன ங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. காவல், தீயணைப்பு வாகனங்களும் தாக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆறுதலோ, இழப்பீட்டு உதவி தொகையோ, வழங்காதது கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் வன்மு றையை தவிர்த்து இருக்க முடியும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுத்து தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப் படுவதாக கூறப்படுகிறது. எனவே, போராடிய இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம்பாதிக்க ப்படாமல் இருக்க, ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது போல இதையும் நீக்க வேண்டும் என்று முக்குலத்துப்புலிகள் கட்சி–யின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






