என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொர்ணகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா
    X

    காளியம்மன் திருநடன காட்சி.

    சொர்ணகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா

    • காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கி துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
    • சொர்ணகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த பொரவச்சேரியில் பழமை வாய்ந்த சொர்ணகாளி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையில் ஆண்டு பெரு விழா நடைபெறுவதுவழக்கம். அதன்படி இந்த ஆண்டு க்கான பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    காளி போன்று வேடமிட்ட பக்தர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடி முன்னே செல்ல அதற்கு ஏற்ப காளி நடனமிடம் திருநடன காட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து காளி அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் தத்ரூபமாக நடைபெற்றது. முன்னதாக சொர்ணகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×