search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் இடம் பிடித்த பொறியியல் கல்லூரி
    X

    இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் கல்வி குழுமத்தின் இணைச் செயலாளர் தர வரிசை பட்டியலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.

    தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் இடம் பிடித்த பொறியியல் கல்லூரி

    • அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
    • பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×