என் மலர்
நாகப்பட்டினம்
- ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும், ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் தனியார் பள்ளிமுன்னாள் மாணவர்கள், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகளின் ஒருங்கிணைப்பாளர் கோவில்பத்து விவசாயிக்கு மாரியப்பன் பயனாளியை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
சிட்டுக் குருவிக்கான கூண்டினை அழகேசன் வழங்கினார்.ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும் ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ராஜ சரவணன் மற்றும் சங்கதினர் சார்பில் செந்தில் குமார் ராஜு ஒருங்கிணைத்தார்.
- திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
- பேரணி கொடியேற்றி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 38 -வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதற்கு மாநாட்டுதலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். மாநாட்டு செயலாளர் தமிழரசன், பொருளாளர் மாசிலா மணி, துணைத் தலைவர் ரமேஷ், துணை செயலா ளர் சந்திரசேகர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி அனை வரையும் வரவேற்றார்.
செல்வராசு எம்.பி, கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்பாண்டி யன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் பாஸ்கர் ஆகியோர் மாநா ட்டில் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் திருமருகலை தனித்தாலுகாவாக அறிவித்திட வேண்டும், திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் சரபோஜி, மாதர் சங்கம் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, செயலாளர் ஜூடி, மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன், இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் ராஜேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக திருமருகலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சியின் அலுவலகத்தை செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பேரணி கொடியேற்றி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- முனிசிபல் பேட்டை சமுதாய கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
- அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்நகராட்சி முனிசிபல் பேட்டை சமுதாயக் கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அப்பகுதியில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை பார்வையிட்டு ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மேலும், டாடா நகர் மற்றும் சேவாபாரதி பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரை வில் அப்பகுதிகளில் புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.
- வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
- ஆறு காட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஆறு காட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப் (வயது 40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது.
வாத்திஸ்வாப்போலந்து நாட்டில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். இலங்கையில் குடிபோதையில் அடிதடி வழக்கில் சிக்கி 3 நாள் ஜெயிலில் இருந்து பின்பு 2000 டாலர் அபராத தொகை கட்டி வெளியில் வந்துள்ளார். ஆனால் இவர் மீது உள்ள வழக்கை முடித்து நாடு திரும்ப வேண்டும் எனஇலங்கை அரசாங்கம் இவரது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. இதனால் 2 ஆண்டுகளாக இலங்கையிலேயே சுற்றி திரிந்துள்ளார்.
பின்பு சொந்த நாடு செல்வதற்கு முயற்சி செய்து ரூ.1 லட்சம் கொடுத்து சீனாவில் தயாரான ரப்பர் படகை வாங்கி அதில் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழக கோடியக்கரைக்கு தப்பி வந்துள்ளார்.
தொடர்ந்து படகை முணங்காட்டில் விட்டு விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள ஆறு காட்டுதுறைக்கு நடந்தே வந்து அங்கு உள்ள கருவைதோப்பில் படுத்து உறங்கி விட்டார். அங்கிருந்து சென்னை செல்ல விசாரித்த போது போலீசாரிடம் மாட்டி உள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பேக்கை சோதனையிட்டு அதில் இருந்த சிறிய கத்தி போன், வாட்டர் பாட்டில், கூலிங் கிளாஸ், பிஸ்கட் ,செல் சார்ஜர், பவர் பேங்க், டார்ச் லைட், பேட்டரி செருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர். மேலும் அனைத்து பணபரிமாற்றமும் போன் மூலம் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இன்று காலை மத்திய உளவுதுறை போலீசார் வாத்திஸ்வாப்பிடம் விசாரணை நடத்தினர். இலங்கையில் தங்கியிருந்ந யார் உதவி செய்தார்கள்? 2 ஆண்டுகள் அங்கு இருக்க பணம் யார் மூலம் வந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்(நாகை), சுரேஷ்குமார்(திருவாரூர்), வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு 13 மீட்டர் நீளத்திலும், 3 அடி அகலத்திலும் இருந்தது. படகு துடுப்பை பயன்படுத்தி செலுத்த கூடியதுபடகில் இலங்கையில் பயன்படுத்தபடும் 1½ லிட்டர் அளவு கொண்ட 16 தண்ணீர் பாட்டில்களும், 4 பாதுகாப்பு உடைகளும், நீந்துவதற்கு பயன்படுத்தும் ஒரு ஜோடி காலணி மற்றும் கண்ணாடி, கருப்பு நிற பை உள்ளிட்டவைகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் காட்டுப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்கணில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது வேதாரண்யம் அருகே கோடியக்காடு மூணாங்காட்டில் முதல் முறையாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 5 சீன உளவாளிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி இருப்பது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்கபட்டது.
- புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதை போக்குவதற்கு புதிதாக இரண்டு 100 கே .வி .ஏ. மின் மாற்றிகள் அமைக்கபட்டது.
இந்த புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார், இள மின் பொறியாளர் அன்பரசன் மனோகரன் மற்றும் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மின் மாற்றி மூலம் சீரான மின் அழுத்தம் கிடைக்கும்.
இதே போல் 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்க பட்டது.
குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு வேதாரண்யம் பகுதியில் 257 மின் மாற்றிகள் இயக்கி வைக்கபட்டுள்ளதாக செயற்பொறியாளர் சேகர் தெரிவித்தார்.
- குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
- குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும்ஏரி, உள்ளது. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது பலராலும் ஆக்கிரமிப்பு செய்யபட்டு குளத்தின் பரப்பளவு குறைந்தது.
குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கணக்கில் உள்ளப்படி 18-க்கும் மேற்பட்ட குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் அரியாண்டி குளத்தை நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளார் முகமது இப்ராஹீம், வார்டு கவுன்சிலர் திருக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் உள்ள செடி, கொடிகள் , ஆகாயத் தாமரையும் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து அந்த குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.
- மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ல்வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் ,முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், மேகலா மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து துறைஅதிகா ரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்நடத்துவது என்றும், வருகிற 27ஆம் தேதி வேதாரண்யத்தில் மிக பிரம்மாண்டமான விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
- நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார்.
- தண்ணீரில் தத்தளித்த மீனவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40) மீனவர். இவர் கடந்த 21-ந்தேதி இரவு பைபர் படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டார்.
அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அய்யாசாமி திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் சக மீனவர்கள் அய்யாசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று நம்பியார் நகர் துறைமுகத்திற்கு கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் அய்யாசாமியின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் காட ம்பாடி மறைமலைநகரில் உள்ள பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து நூற்றுக்கும்மேற்ப ட்ட பெண்கள் அம்ம னுக்கு பூதட்டுகளை கையில் ஏந்தியவாறு கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.பின்னர் கோவி லை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்தி க்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம்செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார்.
- வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர், கீழப்புதனூர், காரையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மொத்தம் 269 மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி சகாயராஜ், பாண்டியன் சத்யமூர்த்தி, தமிழரசி கணேசன், கலாராணி உத்திராபதி, உள்ளாட்சி பிரதிநிதி லீலாவதி பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
- ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரம் கீழவீதியில் அமைந்துள்ளது தேரடி குளம். இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக ஆகாய தாமரை, செடி கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்பட்டது.
இது குறித்து 13-வது வார்டு நகா்மன்ற உறுப்பினர் மயில்வாகனன் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் நகராட்சி தலைவா் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
ஆட்களோடு வார்டு கவுன்சிலர் மயில்வாகணன் இறங்கி வேலை செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.






