என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
    X

    மாநாட்டில் செல்வராஜ் எம்.பி. பேசினார்.

    திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

    • திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • பேரணி கொடியேற்றி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 38 -வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இதற்கு மாநாட்டுதலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். மாநாட்டு செயலாளர் தமிழரசன், பொருளாளர் மாசிலா மணி, துணைத் தலைவர் ரமேஷ், துணை செயலா ளர் சந்திரசேகர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி அனை வரையும் வரவேற்றார்.

    செல்வராசு எம்.பி, கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்பாண்டி யன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் பாஸ்கர் ஆகியோர் மாநா ட்டில் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் திருமருகலை தனித்தாலுகாவாக அறிவித்திட வேண்டும், திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் சரபோஜி, மாதர் சங்கம் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, செயலாளர் ஜூடி, மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன், இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் ராஜேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக திருமருகலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சியின் அலுவலகத்தை செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பேரணி கொடியேற்றி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×