வேதாரண்யத்தில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்கபட்டது.புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.
புதிய மின்மாற்றியை நகரமன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.
புதிய மின்மாற்றியை நகரமன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகரில் மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதை போக்குவதற்கு புதிதாக இரண்டு 100 கே .வி .ஏ. மின் மாற்றிகள் அமைக்கபட்டது.

இந்த புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார், இள மின் பொறியாளர் அன்பரசன் மனோகரன் மற்றும் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மின் மாற்றி மூலம் சீரான மின் அழுத்தம் கிடைக்கும்.

இதே போல் 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்க பட்டது.

குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு வேதாரண்யம் பகுதியில் 257 மின் மாற்றிகள் இயக்கி வைக்கபட்டுள்ளதாக செயற்பொறியாளர் சேகர் தெரிவித்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com