என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது.
    • டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 9 நிபுணர்கள் பயிற்சி வழங்கினர். கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில் குமார், இணை செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். கல்வி நிறுவனத்தின் கல்வி சார் இயக்குனர் முனைவர் மோகன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் மணிகண்டன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர்கள் நாகலட்சுமி, முனைவர் லாவண்யா, முனைவர் ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆசிரியர்கள் நடத்தினர்.

    • பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

    இந்த பேராலயம் வங்க கடலோரம் அமைந்திருப்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு பெருவிழா பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதற்காக பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    • குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரி தண்டலர் ஜெகவீரபாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
    • வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் 20 நாட்கள் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் நாகை மாவட்டம், நகர போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும் மற்றும் சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அவரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் காவலர் வெற்றிச்செல்வனை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர்.
    • விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர். சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து 50 மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து வகுப்பறையிலேயே மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் மாணவிகளை ஏற்றி சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் சாப்பிட்ட மற்ற மாணவிகளின் உடல்நிலையையும் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் அன்பழகன், தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    • பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்.
    • தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறி சென்றார் ஆனால் வெகுநேரமாகியம் அவர் வராமல் மாயமாகி விட்டார்.

    அப்போது தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

    இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயத்தின் உப கோவில்களில் புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கொடி மற்றும் அந்தோணியார் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் பேராலய அதிபரால் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    • குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம், இடுபொருள்கள் வாங்க அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க சென்றனர்.
    • சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தியில் பல லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம் மற்றும் இடுபொருள்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க இங்கிருந்த அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, அக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
    • அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

    அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக

    நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.

    இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • நாகை மாவட்ட கடைக்கோடி பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி உரங்கள் இல்லாமல் சாகுபடி மிகவும் பாதிக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர்கள் வீரமணி, எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் கலந்து கொண்டு பேசினார். ஆலோசனைக் கூட்டத்தில், நாகை மாவட்ட கடைக்கோடி பகுதியான தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி உரங்கள் இல்லாமல் சாகுபடி மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி உரங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

    முன்னதாக தலைஞாயிறு வேளாணி முந்தல் பகுதியில் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் கலந்துகொண்டு காங்கிரஸ்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
    • பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசினையும், ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசினையும், திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விசுவநாதன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு ஆஸ்பயர் அகாடமியின் நிறுவனர் பரணிதரன் தலைமை தாங்கினார். நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். நாளை அமைப்பின்ஒருங்கி ணைப்பாளர் செகுரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    ×