என் மலர்
உள்ளூர் செய்திகள்

பதக்கம் வென்ற காவலரை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பாராட்டினார்.
சிறந்த மீட்பாளருக்கான பதக்கம் வென்ற நாகை காவலருக்கு பாராட்டு
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
- வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
நாகப்பட்டினம்:
சென்னையில் 20 நாட்கள் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் நாகை மாவட்டம், நகர போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும் மற்றும் சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அவரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் காவலர் வெற்றிச்செல்வனை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story






