என் மலர்
நாகப்பட்டினம்
- புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்ேகாவில் புதுப்பிக்க ப்பட்டு யாகசாலை பூஜை அமைத்துகடங்கள் பூஜிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 5-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து 7-ம் தேதி காலை யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வ லமாக எடுத்து வரப்பட்டு கலசங்களில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக பரிவார தெய்வங்களின் கோவிலுக்கும் கும்பா பிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர், இரவு அம்பாள் வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், ஆய்வாளா், பொறுப்பாளா்கள், கிராம நாட்டாண்மைகள், உபயதாரா்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.
- நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்களை கொள்ளையடித்தனர்.
- போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல் அமீது, ஜின்னா, தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர் மூளையை சேர்ந்த கலைமணி ஆகியோரின் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்நிலையில், தோப்புத்துறை சோதனை ச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அந்த காரில் 20 பவுன் நகை மற்றும் 2 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் மற்றும் திருவாரூரை சேர்ந்த குரு சக்தி ஆகியோரிடம் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.
- முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.
- வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேம் நடந்தது.
இதையொட்டி முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன.
மேலும் கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமங்கள், கோ பூஜை, தன பூஜை முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹதி, கடம் புறப்பாடு நடந்தது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோபுர கலசத்திற்குவஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியா ர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்தனர்.
- விவசாயிகளை பெருமளவில் திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.
- 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சிபிசிஎல் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாநில தலைவர் ஆனந்தகுமார், போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் ஆகியோர் பேசினார்.
கூட்டத்தில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தும் 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும், சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகளை பெருமளவில் திரட்டி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் இயற்கை வேளாண் விவசாயி பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பாளர் பார்த்தசாரதி மற்றும் சங்க நிர்வாகிகள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
- முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
- பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோவிலில் 65-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முன்னதாக, காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா தொடங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பின் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவும் விடிய விடிய பலகலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
தொடர்ந்து, பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மறலாளிகள், நிர்வாக குழுவினர்கள் உள்பட தேத்தாகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.
விழாவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.
+2
- இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
- இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது.
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கும் மாதாஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழே நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி விரதம் இருந்த, நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு)் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்திலும், விண்மீன் ஆலயம், மேல் கோவில், கீழ் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டு சென்றது.
தேர் பவனி தொடங்குவதற்கு சற்று முன்பாக லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சரியாக 8 மணிக்கு தேர்பவனி தொடங்கிய நேரத்தில் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தேர்பவனி நடந்தது.
தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி 'மரியே வாழ்க' என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.
மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்ரிய மாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.
இந்த 7 தேர்கள் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர்பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கு இருந்தபடியே தேர் பவனி செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் அன்னை மரியே வாழ்க என கைகூப்பி வணங்கி கோஷமிட்டனர்.
தேர்பவனியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைைமயில் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் வேளாங்கண்ணி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அதேபோல் கடலோர பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார் 200 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூற்று பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்குண ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படுகிறது.
- ஆசிரியர்களுக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
- 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது பஷீர், அப்துல் மாலிக் ஆகியோர் சார்பில் ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருமருகல் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
இதில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியே சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார்.
இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைக்கள் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
- புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
- முதல்-அமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
திருமருகல் ஒன்றியம் கொ த்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடத்தினையும், 15 நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அறைக்கும் ஆலையினையும், ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:-
முதல மைச்சர் பொதுமக்களின் நலனை கருதி இலவச பஸ் பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி போன்ற பல்வேறு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும், நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியும், 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் மாணவர்களின் நலன் கருதி நேற்றைய தினம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
நம் முதலமைச்சர் நம்மை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் அனைவரும் அவ்வாறு அறிவிக்கும் திட்டங்களை பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
- நாகை மாவட்டத்தில் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.
- விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக ஆட்சியில் துணை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை இணைந்து தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடினர்.
இவ்விழா வினை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தி ல்குமார் ஆகியோர் தலைமை யேற்று துவக்கி வைத்தனர்.
இணைச் செயலர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய விளையாட்டு தினம், விளையாட்டு வீரர்களின் சிறப்பு மற்றும் நாகை மாவட்டத்தின் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.
விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.
இதில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிக மேலாண்மை துறை தலைவர் முனைவர் ராஜாகிருஷ்ணன், வணிக ஆட்சியில் துணை தலைவர் முனைவர் கற்பகம் மற்றும் பிரேம்நாத் ஆகியோர் செய்திருந்தனர்.
- தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடக்கிறது.
- நாளை மாலை கொடி இறக்கம் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விழாவையொட்டி பொது சுகாதார அமைப்பின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளரும் விழாவின் சுகாதார பொறுப்பு அலுவலருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கண்காணிப்பில் 30 டாக்டர்கள், 10 மருந்தாளுநர்கள், 30 செவிலியர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 4 வட்டார சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்கள், 70 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி., நாய்க்கடி மருந்து, பாம்பு கடி மருந்து, உயிர் காக்கும் மருந்து என வசதிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தினமும் வேளாங்கண்ணியில் 4 டிராக்டர்களில் 485 துப்புரவு பணியாளர்கள் கொண்டு 6 முதல் 7 டன் வரை குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றில் குளோரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து ரெயிலில் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 12 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாளை(வியாழக்கிழமை) தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும். மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல் படை போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.
- வாக்குவாதம் கைகலப்பாக மாறவே சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பகுதியில் சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாகுளம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த குளத்தை புதுதெரு பகுதியை சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருவதால், குளத்தின் உரிமையாளர் சசிக்குமார் என்பவருக்கும் புதுதெருவை சேர்ந்த மக்களுக்கும் தகராறு இருந்து வருகிறது.
இதுதொடர்பான விசாரணை வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலக த்தில் நடந்துவரும் நிலையில் குளத்திற்கு கரைகட்டி பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள ஜே.சி.பி வாகனத்துடன் சசிக்குமார் வருகைத் தந்து இருந்தார்.
அப்போது இரு தரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, சசிக்குமார் உள்ளிட்டோரை சில பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசு ந்தரம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கோட்டாட்சியர்விசாரணை நடத்தி வருகிறார் இதற்கிடையே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இடத்தகராறில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.






