என் மலர்

  நீங்கள் தேடியது "Commendation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசிரியர்களுக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

  விழாவில் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது பஷீர், அப்துல் மாலிக் ஆகியோர் சார்பில் ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருமருகல் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

  இதில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியே சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு 25 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார்.

  இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைக்கள் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

  முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

  ×