என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்
    X

    தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

    தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்

    • நாகை மாவட்டத்தில் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.
    • விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக ஆட்சியில் துணை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை இணைந்து தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடினர்.

    இவ்விழா வினை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தி ல்குமார் ஆகியோர் தலைமை யேற்று துவக்கி வைத்தனர்.

    இணைச் செயலர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    தேசிய விளையாட்டு தினம், விளையாட்டு வீரர்களின் சிறப்பு மற்றும் நாகை மாவட்டத்தின் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் முனைவர் ராஜா எடுத்துரைத்தார்.

    விளையாட்டு வீரர்களின் திறன் குறித்து நாளை இயக்கத்தின் இயக்குனர் சேகுரா மாணவர்களிடம் உரையாற்றினார்.

    இதில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிக மேலாண்மை துறை தலைவர் முனைவர் ராஜாகிருஷ்ணன், வணிக ஆட்சியில் துணை தலைவர் முனைவர் கற்பகம் மற்றும் பிரேம்நாத்‌ ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×