என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.

    மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

    • கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை.
    • புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இ ன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை, சிவக்குமார் ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பன்னீர்செ ல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    • சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு.
    • அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும்.

    நாகப்பட்டினம்:

    400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்து ஜீவ சமாதி நிலையில் இருந்து நாகூரில் அருள்பாலித்து வரும் தமிழ் புலவராம் ஸ்ரீ காங்கேயர் சித்தர் ஜீவ பீடத்தில் ஐப்பசி முழுநிலவு தின வேள்வி மற்றும் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்க அன்னாபிஷேகம் மாற்றும் வேள்வியாகம் நடைபெற்றது கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

    அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

    அறிவியலும் ஆன்மிகமும் சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது.

    அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவ பீடங்களின் வேள்விகளில் கலந்துகொள்வது, அதில் பங்கெடுப்பது என்பது மிக மிக சிறப்பான பலன் தரக்கூடிய செயல் ஆகும் சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற பழமொழி கூறப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும்.நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும்.அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்

    உண்டு என்பது ஐதீகம்.சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தார்கள் ஏற்பாட்டினை ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அறக்கட்டளையை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், அனிதா பழனிவேல், சுதாகர், குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
    • அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் செயல்பட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை பாதிப்பாக மாறும் நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யவிரைவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பருவமழை பாதிப்பின்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.

    மின்சாரம், கைபேசி, குடிநீர், மருத்துவமனை ஆகியவைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடு ம்செயல்பட வேண்டும்.

    அப்படி செயல்பட்டால் நான் மனிதநேயத்தோடு செயல்பட்டதற்கான உரிய மதிப்பு மக்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு.
    • போதை பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையின் சார்பில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிநிலவன் முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் அறிவழகன் வரவேற்றார்.வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு உறுதிமொழி படித்து ஏற்க செய்தார். முடிவில் ஆசிரியர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

    இதே போல்வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் எழிலரசன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் ஆதவன் வரவேற்றார். போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் நாகராஜன் பேசினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
    • பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.

    விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.

    இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.

    அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

    அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.

    • நான்கு தவணைகளாக ரூ. 34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்.
    • மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் மெயின் ரோடு பட்டமங்கலம் மனோகர் மகள் கீர்த்தனா (வயது 22).

    இவர் தனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் உறவினர்கள் போல் பேசி அவசரமாக பணம் உதவி தேவைப்படுகிறது எனக்கூறி கூகுள் பே மூலம் நான்கு தவணைகளாக ரூ.34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்–குமரன், தலைமை காவலர் முருகதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.34,000 பணத்தினை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு.
    • கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களிலும் சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே மேற்கண்ட அரசாணையில் உள்ள துணை விதியின் குறிப்பிட்டுள்ளபடி பொருத்தப்பட வேண்டும் என இதன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

    பள்ளி வாகனங்களில் சென்சார் உடன் கூடிய கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு பொருத்தப்படாமல் இயக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
    • விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தில் வசிப்பவர் வேணு காளிதாஸ். விவசாயி.

    இவர் தனது ஒரு வயலின் நடுவே வேறொரு விவசாயின் முயற்சியால் கலப்பினமாக இருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒரு அரிய வகையான சின்னார் என்ற சிவப்பு நெல் ரகத்தை வேளாண்மையின் அச்சாணியான காளை வடிவத்தில் நட்டு அதற்கு தீவனமான குதிரைவாலி புல் ரகத்தை சின்னார் நெல்லை சுற்றி நட்டுள்ளார்.

    அந்த 2 பயிரும் நன்றாக வளர்ந்த உள்ளது. வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வயலில் காளை மாடு உருவம் போல் நெற்பயிர் சாகுபடி படம் சமூகவளைதலங்களில் வைரலாகி விவசாயிக்கு பாராட்டு குவிகிறது.

    • உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணி.
    • வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரிக்காப்பாளர் யோஹேஸ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி, இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் பிராந்தியங்கரையில் உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிமேடு பகுதியை சேர்ந்த அலி அக்பர், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் சமைக்க விலைக்கி வாங்கி வந்தனர்.

    இருவரையும் பிடித்து கோடியக்கரை வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.

    இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்

    கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×