என் மலர்
நாகப்பட்டினம்
- நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
- வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
- கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுமருந்து அடிக்கும் பணி.
வேதாரண்யம்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் (பொஅலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
- சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.
வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.
- மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
- மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருவாய்மூர் கிராமத்தில் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்ததை முன்னிட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் திருவாய்மூர் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.
- பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
- மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற முன்னேற்பாடுகள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு கனமழையின் போது நாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு அதிக அளவு தண்னீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இம்முறை அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1077, 04365 251992, 8438669800 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
- மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்
இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.
மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் திருநள்ளார் தென்னங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35) கூலித்தொழிலாளி.
இவரும் இவருடைய நண்பர் தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (32) என்பவரும் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் டிரோன் எந்திரம் மூலம் களைக் கொல்லி மருந்து அடித்துள்ளனர்.
அப்போது வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென ராமகிருஷ்ணன் மயங்கி வயலில் விழுந்தார்.
உடன் அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
- அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
- சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணி செபஸ்தியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30).
அதே பகுதியை சேர்ந்தவர் ரெனால்ட். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் ரெனால்ட்டுக்கு ரூ.40,000 பணம் கொடுத்துள்ளார்.
கொடுக்க பணத்தை ராஜ்குமார் திரும்ப கேட்டார்.
இதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டிற்கு வந்த ரெனால்ட் அவரது சகோதரர் ராகுல், நண்பர் திராவிட தமிழன் ஆகிய மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
அப்போது அதை தடுப்பதற்காக ராஜ்குமாரின் தம்பி கருணாகரன் வந்துள்ளார்.
அவரையும் மூன்று பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த ராஜ்குமார் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜ்குமார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது.
- மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நெய்க்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் மகா கணபதி, தர்மசாஸ்தா, தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
- கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூர் கிராமத்தில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவூர் அரசினர் விடுதி அருகே சாராயம் விற்ற நாகை, செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் (வயது50), இரிஞ்சூர் கிராமம் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன்னாத் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






