வயலில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வயலில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
Published on

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலம் திருநள்ளார் தென்னங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35) கூலித்தொழிலாளி.

இவரும் இவருடைய நண்பர் தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (32) என்பவரும் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் டிரோன் எந்திரம் மூலம் களைக் கொல்லி மருந்து அடித்துள்ளனர்.

அப்போது வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென ராமகிருஷ்ணன் மயங்கி வயலில் விழுந்தார்.

உடன் அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com