என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
    • திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், ஒன்றிய பகுதிகளில் மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
    • ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பெருமாள் கீழ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயலறை கட்டடம் இல்லாததால், அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.

    எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு சமயலறை கட்டடம் கட்ட வேண்டுமென நாகை எம்.எல்.ஏவிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு.
    • பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமலும் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டு வருகின்றன.

    ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மணல் மூட்டையில் அடுக்கி இருப்பதை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் செங்கவராயன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கிய மேரி, திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குத்தகை நிலங்களை அப்பகுதி விவசாயிகள் பரம்பரையாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சாகுபடி செய்த பயிர் பாதித்து உரிய குத்தகை செலுத்த முடியாத சூழலில் அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில்,விவசாயிகள் கோவில் நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 18-ம் தேதி ஏலம் விடப்படுவதாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு,
    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் நாகை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து நேரில் நிலத்தை ஏலம் விடும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எம்.பி. செல்வராசு கூறுகையில்; குத்தகையை முடிந்த அளவுக்கு கட்டுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், தற்சமயம் சாகுபடி செய்து வரும் நிலத்தை குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது என்று கூறினார்.

    எனவே, தமிழக அரசு தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்தி உரிய குத்தகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நாகை எம்.பி. செல்வராசு கோரிக்கை வைத்துள்ளார்.

    • நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
    • குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.

    தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.

    மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    • மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடையும் சூழ்நிலை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முள்ளியாறு மற்றும் மாணங்கொண்டான் ஆறு சுமார் 20 கி.மீ தூரம் வரை பாசன மற்றும் வடிகால் ஆறாக ஓடுகிறது.இந்த ஆறுகளில் வாய்மேடு , மருதூர் , ஆயக்காரன்புலம் ,தாணி கோட்டகம் பகுதிகளிலில் 10 கி.மீ தூரம் அதிக அளவில் ஆகாயதாமரை மண்டிக்கிடக்கிறது.

    ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் தண்ணீர் தெரியாத அளவிற்கு மிக நெருக்கமாக மண்டிக்கி டப்பதால் இந்த பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில்தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக தான் தண்ணீர் வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரை நிரம்பி தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.

    இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?

    கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?

    என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
    • வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுமருந்து அடிக்கும் பணி.

    வேதாரண்யம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் (பொஅலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    • மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருவாய்மூர் கிராமத்தில் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்ததை முன்னிட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    அப்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திருவாய்மூர் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

    ×