என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
    • 100 பேருக்கு போர்வைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி ஆலய வாசல், பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதித்த பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தற்பொழுது நிலவும் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இதனை போக்கு வகையில் வேளாங்கண்ணி உதவி கரங்கள் சேவை நிறுவனம் சார்பில் 100 பேருக்கு போர்வைகளை இரவு நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.

    இந்நிகழ்வில் உதவிக்–கரங்கள் நிறுவனர் ஆண்டனி ஜெயராஜ் தலைமையேற்று ஏழைகளுக்கு போர்வை அணிவித்து துவங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் பீட்டர், ஜெயசீலன் ஆசிரியர், துரைராஜ், அந்தோணிராஜ், கருணானந்தம், விஜய் மற்றும் உதவிக்கரங்கள் சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.

    உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.

    • தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது.
    • மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்டு ள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலை விலும் காரை க்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இதன் காரணமாக நாகப்பட்டினம், காரை க்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடல் சீற்றமாக காணப்படு வதால் மீன்வளத் துறையில் எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    • நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
    • கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

    வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.

    மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
    • மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅமிர்த வள்ளியம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்தவர் அங்கு கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.இது குறித்து கோவில் நிர்வாகி குணசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர், தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
    • சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.

    மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.

    அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
    • நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.

    கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
    • இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கினர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி காவல் நிலையம் சாா்பில் உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக திட்டச்சேரி காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு ஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.

    இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாகை திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி.
    • வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலசகடமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45) விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கலியமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளார்.

    அப்போது அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து வயலில் மயங்கி விழுந்தாா்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார்.
    • பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சி) பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×