search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violent"

    • நிகழ்ச்சியில்தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.
    • விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான சர்வதேச தின விழா நடைபெற்றது.

    இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்இ ன்ஸ்பெக்டர்கள் செந்தி ல்வேலன், ராமநாதன் , ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் விஜயகுமார், தனிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் ஜோதிலட்சுமி, கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சின்ன கடை தெரு மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வந்து ரெயில் நிலையங்களை சுற்றி காண்பித்தனர்.

    பின்னர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ‌அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

    இதையடுத்து அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், பரிசு வழங்கப்பட்டது.

    • போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
    • இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கினர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி காவல் நிலையம் சாா்பில் உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக திட்டச்சேரி காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு ஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.

    இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
    • இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.

    காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வைத்த போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

    இந்தோனேசியாவில் அதிபர் விடோடோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைநகர் ஜகார்த்தாவில் மட்டும் 3000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில், ஜோகோ விடோடோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகள் நடைபெற்றன. முதலில் அமைதியாக போராட்டம் நடைபெற்றது. நேரம் செல்லச் செல்ல போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீவைத்தும், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்திப் போட்டும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் உருவானது.



    இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறையின்போது 6 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. வன்முறை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை பரவாமல் தடுப்பதற்காக, போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். 
    வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். #Venezuela #Violent
    கராக்கஸ்:

    வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.



    உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் வெனிசூலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகளை அவர் மூடி வருகிறார். அந்த வகையில் பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளுடனான எல்லையை இரு தினங்களுக்கு முன்பு மூடினார்.

    ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசூலா மக்கள் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

    இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 
    ×