என் மலர்
நாகப்பட்டினம்
- நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
- அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.
நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.
எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.
நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.
- ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
- வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).
இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.
இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .
உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர்.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்றும், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்றும் அவரின் சாதனைகள் குறித்து இரங்கள் நிகழ்வில் பேசப்பட்டது.
- 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
- காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒக்கூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் சதீஷ்குமார் (வயது 26) ஒக்கூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் பிரபு (வயது 28) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
திட்டச்சேரியில் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்ட–வர்களையும் சாராயம் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.
- மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டபள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெ ற்ற தடகளப்போட்டி மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
14 வயதுக்கு உட்பட்ட வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், 17 வயது பெண்கள் பிரிவில் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் தடகளப் போட்டியில் ஈட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், தட்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று ள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாண விகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், உடற்க ல்வி ஆசிரியர் கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொ ண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
- கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.
- புதிய தொழில்நுட்ப பயன்பாடு பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை.
- இணைச்செயலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அமிர்த விஷ்வா வித்யாபீடம் இணைந்து விர்ச்சுவல் லேப் என்ற புதிய தொழில்நுட்ப பயன்பாட்டினை பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார். அமிர்த விஷ்வா வித்யா பீடத்தை சார்ந்த அதன் வெர்ச்சுவல் லேப் ஒருங்கிணைப்பாளரான சனீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி செயலர் செந்தி ல்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆலோசகர் பரமேஸ்வரன், நிர்வாக தலைவர் முனைவர் மணி கண்ட குமரன், கல்விசார் இயக்குனர்முனைவர் மோகன், முதல்வர்முனைவர் ராமபா லன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை மற்றும் பேராசிரியர் முனைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமோகன் வரவே ற்றார். பேராசிரியர் முனைவர் ராமானுஜம் நன்றி கூறினார்விழா ஏற்பாடு களை இயந்தி ரவியல் துறை ஒருங்கிணை ப்பாளர்கள் செய்தனர்.
- நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
- காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- 100 பேருக்கு போர்வைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
நாகப்பட்டினம்:
உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி ஆலய வாசல், பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதித்த பெண்கள், ஆண்கள் ஆதரவற்ற முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தற்பொழுது நிலவும் கடும் குளிர், பனியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனை போக்கு வகையில் வேளாங்கண்ணி உதவி கரங்கள் சேவை நிறுவனம் சார்பில் 100 பேருக்கு போர்வைகளை இரவு நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று வழங்கினர்.
இந்நிகழ்வில் உதவிக்–கரங்கள் நிறுவனர் ஆண்டனி ஜெயராஜ் தலைமையேற்று ஏழைகளுக்கு போர்வை அணிவித்து துவங்கி வைத்தார்.
நிர்வாகிகள் பீட்டர், ஜெயசீலன் ஆசிரியர், துரைராஜ், அந்தோணிராஜ், கருணானந்தம், விஜய் மற்றும் உதவிக்கரங்கள் சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.
உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.
- தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது.
- மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
வங்கக் கடலில் ஏற்பட்டு ள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலை விலும் காரை க்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக நாகப்பட்டினம், காரை க்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படு வதால் மீன்வளத் துறையில் எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
- கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்
வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.
மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.






