என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை விபத்து"

    • மக்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த லூயிஸ்டேவிட்டை பிடித்து அங்குள்ள கோவிலின் உள்ளே பூட்டி வைத்தனர்.
    • சாலை விபத்தில் காயமடைந்த நாகூரை சேர்ந்த ரோஷினி மற்றும் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நாகூர் வழியாக பொது போக்குவரத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சிவன் மேலவீதி, சிவன் கீழ வீதி, மருத்துவமனை சாலை வழியாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு அதிவேகமாக அந்த பகுதியில் வந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 3 பேரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த லூயிஸ்டேவிட்டை பிடித்து அங்குள்ள கோவிலின் உள்ளே பூட்டி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் நாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசாரிடம் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை ஒப்படைத்தனர்.

    இந்த சாலை விபத்தில் காயமடைந்த நாகூரை சேர்ந்த ரோஷினி மற்றும் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து நாகூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×