என் மலர்
நாகப்பட்டினம்
- அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
- வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
நாகப்பட்டினம்:
சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.
இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
நாகப்பட்டினம்:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார்.
இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
- பைக்கில் வைத்திருந்த லைெசன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் காவல் சரகம், தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு மரமில் எதிரில் மாட்டு தீவன கடை நடத்தி வருபவர் சண்முகம். இவரது மகன் வேலவன்.
இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக எலக்ட்ரிக் பைக் வைத்து பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
பின்னர் வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை சாவி போட்டு ஸ்டார்ட் செய்தார்.
அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
மேலும் பைக்கில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்கள், லைெசன்ஸ் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
- ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
- பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
- பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
- பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
வேதாரண்யம்:
பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .
அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.
- பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.
அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.
அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 436 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவ- மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9 முதல் 19 வயது வரையிலான 436 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பிரிவுகளில் நடந்த போட்டிகளை அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
செஸ் கழக மாநில இணை செயலாளர் பாலகுணசேகரன், தலைவா் விஜயன், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் அருண்குமார் உட்பட பயிற்சியாளர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.
அகரம் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி வரவேற்றார். செஸ் கழக இணை செயலர் மணிமொழி நன்றி கூறினார்.
- வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
- கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர்
அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.
- பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.
பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,
அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- வீடு வீடாகச் சென்று இளைஞ ர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
- வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மேற்கு ஓன்றியம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாம் நகர மன்ற தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்காமராஜ் முன்னிலை வகித்தார். வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.
வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஒன்றுஊராட்சிக்கு உட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை கொச்சிகுத்தகைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று இல்லம் தேடி இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கும்பணி நடைபெற்றது. இதில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்அசோக் குமார்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் அணி அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் மேற்கு ஒன்றியதுணை செயலாளர் அருள்அரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
- முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.






