என் மலர்
நாகப்பட்டினம்
- சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
- ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
கடைவீதிகளிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலை பகுதிக்கு கொண்டுவிட்டு, அதன் செலவையும் வசூலித்து அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து நகர மன்ற தலைவர் பேசுகையில்:-
வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது தமிழக அரசால் தலைஞாயிறு பகுதிக்கு ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதில் வேதாரண்யம் நகராட்சியையும் இணைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வரும் 2 ஆண்டுகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.
மேலும் தற்போது உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை.
- அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்–பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் இந்திரசித்தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் புயல் குமார், பொருளாளர் மதியரசு, மகளரணி செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அண்ணாத்துரை தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஐபெட்டோ பவளவிழா எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது, மாவட்ட கல்வி அலுவலகத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகஸ்தியன் பள்ளி - திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் சங்க உறுப்பினர்கள் அம்பிகாநிதி, நீலமேகம், சேகர், ஆனந்த் முருகு, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் குமரவேலவன் நன்றி கூறினார்.
- கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
- சிறந்த கால்நடைகளின் உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் தனசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் ஸ்ரீகுமார், தம்பிராஜா மற்றும் கால் நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாக உள்ளன.
- பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழக பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியுள்ளதாவது:-
நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில், பழுதடைந்த நிலையில் இருந்த வகுப்பறை கட்டிடங்கள் அரசு ஆணைப்படி இடிக்கப்பட்டுவிட்டன.
தற்போது, பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல், இதர அரசு, தனியார் கட்டிடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதேபோல், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வகுப்பறை கட்டிடங்கள் குறைவாகவும் உள்ளன.
எனவே, அத்தகைய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின், பள்ளிகளின் முழு பட்டியலையும் அமைச்சரிடம் வழங்கினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
- நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சி.
நாகப்பட்டினம்:
நாகை வள்ளலார் தர்ம சாலை, வள்ளலார் கருணை குழு, நாகூர் சித்திக் சேவை குழுமம், அருட்கஞ்சி குழு ஆகியவைகள் இணைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வருகைதரும் பொது மக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சியை இலவசமாக வழங்குகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இச்சேவையை செய்துவரும் இவர்கள் 1000 நாட்களை கடந்தும் இலவச சேவையை செய்து வருகின்றனர்.
அரிசியுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், ஓமம், தேங்காய்பால், கீரை வகைகள், பூண்டு, இஞ்சி, உள்ளிட்ட 14 பொருட்களை சேர்த்து இலவசமாக வழங்கப்படும் அரிசி கஞ்சியை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்து செல்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கருணை யுள்ளம் கொண்டோரின் நிதி பங்களிப்பு காரணமாகவே இது சாத்தியமாகி இருப்பதாகும் தொடர்ச்சியாக இந்த சேவையை செய்வோம் என்று தெரிவித்தனர்.
நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆயிரம் நாட்களை கடந்துள்ள வள்ளலார் அமைப்பினரின் இலவச கஞ்சி ஊற்றும் தொண்டு சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் படகு மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சுங்கதுறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி வெள்ளாற்றின் பாலத்தில் இன்று அதிகாலை சுங்கதுறை அதிகாரிகள் படகில் சென்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகபடும்படி நின்ற பைபர் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கஞ்சா மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 200 கிலோவாகும். மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நாகை புஷ்பவனத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் மற்றும் அருளழகன், நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.
- தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
- நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வட மழை மணக்காட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோபா மலர்வண்ணன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், துணை அமைப்பாளர் ஜோதி செல்லபாண்டியன், ரெத்தினசாமி, கவியரசன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய துணைச் செயலாளர் சேது ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகனாதச மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வம் செந்தில், சார்பு அணி அமைப்பாளர் கலைக்கோவன், கவி இளவரசன் ஒன்றிய கிளைக் செயலாளர்கள் தசமணி, சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி காமராஜ், வேதரத்னம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
- வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
நாகப்பட்டினம்:
சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.
இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
நாகப்பட்டினம்:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார்.
இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
- பைக்கில் வைத்திருந்த லைெசன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் காவல் சரகம், தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு மரமில் எதிரில் மாட்டு தீவன கடை நடத்தி வருபவர் சண்முகம். இவரது மகன் வேலவன்.
இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக எலக்ட்ரிக் பைக் வைத்து பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
பின்னர் வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை சாவி போட்டு ஸ்டார்ட் செய்தார்.
அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
மேலும் பைக்கில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்கள், லைெசன்ஸ் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
- ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
- பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
- பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






