என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
    • முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.

    இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

    • குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டன.
    • விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர்.

    இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன் போடப்பட்டு முதல் கட்டமாக 18 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.

    மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.

    முன்னதாக குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து சந்தனம் - குங்கும் பொட்டுவைத்து தேங்காய் உடைக்கபட்டு தீபாரதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் உத்திராபதி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர், மச்சழகன், ஊர் பிரமுகர்கள் நமசி. நாகராஜ் திவாஸ்கர் ஊராட்சி செயலாளர் பிரியங்கா, ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி கஸ்தூரிபாய், ஊராட்சிமன்ற உறுப்பினர் ரேவதி தியாகராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
    • மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.

    இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.

    சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .

    இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின.
    • சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று காலை அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1½ பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.

    அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தொழிலாளி தங்கப்பொண்ணு என்பவரின் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது.
    • சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாகை மாவட்டம் நாகூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தொழிலாளி தங்கப்பொண்ணு என்பவரின் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது.

    இதில் தங்கபொண்ணு உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சுனாமி பேரிடர் காரணமாக தங்கபொண்ணுக்கு கடந்த 2004-ம் ஆண்டு தொண்டு நிறுவனம் சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வீடும் இடிந்ததால் வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருகிறார். சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகம்.
    • 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் வளாகத்தில் அய்யப்பன் சாமிக்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு கார்த்திகை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக அய்யப்ப சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அய்யப்பன் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முகாமில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
    • மருத்துவ சேவைகளை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கத்தார் ஜமாத் அமைப்பு சார்பாக நாகையில் இலவசசிறப்பு மருத்துவ முகாம் நடை–பெற்றது.முகாமை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குறிப்பாக பேச்சுதிறன் குறைபாடு, பாத நரம்பியல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவையை மேற்கொள்ள 3 மருத்துவர்கள் வருகை தந்து இருந்தனர்.

    மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

    மருத்துவ முகாமிற்கு கத்தார் ஜமாத் நாகை மாவட்ட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட துணைச் செயலாளருமான நாகை சாதிக் தலைமை வகித்தார்.

    இதில் பொருளாளர் அப்துல் ரகுமான், செயலாளர் சையது யூசுப், துணைச் செயலாளர் கரீம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் வருகிற 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழக மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர், நாகூர் நம்பியார்நகர், சாமந்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை.
    • குழந்தை படுக்கையில் இறந்த நிலையில் இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சியாத்தமங்கை ஊராட்சி, மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து (வயது 35) கூலித்தொழிலாளி.

    இவருக்கும் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் தட்டாத்திமூலை பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி ருத்ரா (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மாரிமுத்து தீபாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தீபா தனது குழந்தை ருத்ராவுடன் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவை சமா–தானம் பேசி அழைத்து வர மாரிமுத்து சென்றுள்ளார். தீபா வர மறுத்ததால் குழந்தை ருத்ராவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை தனது தாயரிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும் அங்கு வந்து குழந்தையை தருகிறேன் எனக்கூறி உள்ளார்.

    இதையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

    இதையடுத்து தீபா ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்த–போது மாரிமுத்து தூக்கில் தொங்கியபடியும், குழந்தை படுக்கையில் இறந்த நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா சத்தமிட்டு அலறினார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் மாரிமுத்து, ருத்ரா ஆகியோரின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து மாரிமுத்துவின் தந்தை ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை தனது தாயிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும், மறுபக்கம் மாரிமுத்துவின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததாலும் ஆத்திரத்தில் குழந்தையை துணியால் முகத்தை மூடி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தனர்.

    குடும்ப தகராறில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.
    • அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.

    முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.

    பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×