search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mantus storm"

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.
    • சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது‌. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், புயலாக மாறினால் தமிழகத்தை யொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிரும் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 6-ந்தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில் 11-ந்தேதி காலையில் திடீரென்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் 12-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீண்டும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் ஓய்ந்த நிலையில் கடலில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. ஆனால் திங்கட்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 15 ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் . மேலும் வங்க கடல் பகுதிகளில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்திரும்ப வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

    • விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி
    • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

    மேலபுலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து மேலபுலம் - சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார்.

    மேலபுலம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கீழ்வீதி ஊராட்சியில் மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்
    • போக்குவரத்து மாற்றம்

    வாணியம்பாடி:

    மாண்டஸ் புயலால் வாணியம்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதி சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், வாணியம்பாடி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இதேபோல், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில், சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதை நகராட்சிப் பணியாளர்கள் வெட்டி அகற்றினர்.

    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
    • அதிகாரிகள் ஆய்வு

    அரக்கோணம்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீடு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. நேற்று மழையின்போது புளிய மரம் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது.

    ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் அருகில் உள்ள தந்தை வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாகயாருக்கும் எவ்வித பாதிப் பும் ஏற்படவில்லை. சேதம் அடைந்த வீட்டினை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் பார்வையிட்டார்.

    மழையால் தணிகைபோளூர் பெரிய ஏரி நிரம்பி கடவாசல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கடவாசலில் மீன்களை பிடித்து வருகின்றனர். அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
    • 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் பகுதியில் சுமார் 60 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சுமார் 14 அடி உயரம் உயர்ந்து, கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல க்கூடாது என மீன்வ ளத்துறை அதிகா ரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் இதனை மீறி மீனவர்கள் யாரேனும் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பாதுகாப்பாக முன்னோக்கி கொண்டு வந்து வைத்தனர்.

    மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இது மட்டுமின்றி கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்றுடன் இயல்புகள் நிலைக்கு கடல் பகுதி திரும்பியதால் மீனவர்கள் இன்று 11-ந் தேதி முதல் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீனவளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்றனர். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் நள்ளிரவு முதல் ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்து கடலூர் துறைமுகம் மற்றும் கரைக்கு ஆர்வமுடன் கொண்டு வந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது. 

    • கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
    • கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவுகாற்றுடன் கன மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

    காற்றுடன் கூடிய கன மழைபெய்ததால் பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்றுவேரோடு சாய்ந்து விழுந்தது இதனால் நேற்று இரவு அங்கு நடந்த ஐயப்பபக்தர்கள் கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது 

    • சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.

    வேதாரண்யம்:

    வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

    கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.

    கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

    ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் .
    • கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவ மழை புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் பொழுது இங்கு அதிகப்படியான பாதிப்புகள் உண்டாகிறது . இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மான்டஸ் புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மரக்காணம் பகுதி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது .இதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்களான பைபர் படகு வலை போன்றவைகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    மேலும் கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். மரக்காணம் பகுதி கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் எக்கிய குப்பம் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்

    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ×