search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புயல் எச்சரிக்கை  - கடலுக்கு சென்ற மீனவர்களை வாக்கி டாக்கி மூலம் மீட்ட  மீன்வளத்துறை
    X

    மீனவர்களை வாக்கி டாக்கி மூலம் கரைக்கு திரும்ப அழைப்பு விடுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள்.

    புயல் எச்சரிக்கை - கடலுக்கு சென்ற மீனவர்களை வாக்கி டாக்கி மூலம் மீட்ட மீன்வளத்துறை

    • சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.

    வேதாரண்யம்:

    வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

    கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.

    கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

    ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×