search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குப்பையில் கிடந்த 2 தங்க மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தூய்மை பணியாளர் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்
    X

    கீழ்வேளூர் பேரூராட்சியில் குப்பையில் கிடந்த 2 தங்க மோதிரங்களை தூய்மை பணியாளர் சிந்தாமணி, பழனிவேலிடம் ஒப்படைத்தபோது எடுத்தபடம்

    குப்பையில் கிடந்த 2 தங்க மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தூய்மை பணியாளர் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்

    • மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின.
    • சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று காலை அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1½ பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.

    அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    Next Story
    ×