என் மலர்
நாகப்பட்டினம்
- சாலைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
- பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம்:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.
இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதா ரண்யத்தில் முகாமிட்டு ள்ளனர்.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறுவுறுத்தல்படி ஒருங்கிணைந்த கல்வி துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் அலுவலகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் அம்சேந்திரன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சமூக நல விரிவாக்க அலுவலர் தையல் நாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறதொடர்பு பணியாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
- தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
- ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 10-ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன், பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா காட்சி செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பச்சைகாளி, சிவன், காத்தவராயன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த நடனம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.
வேதாரண்யம்:
வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.
கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
- நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூர் ஊராட்சியிலுள்ள, வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
போதிய வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏவிடம் மக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அங்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விரைவில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
- தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத் துறை மூலம் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழிசார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பது மட்டுமில்லாமல் உள்நாட்டு மறறும் வெளிநாட்டு மீன் ஏற்றுமதியும் நடைபெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.
- 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
- முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.
இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
- குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டன.
- விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர்.
இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன் போடப்பட்டு முதல் கட்டமாக 18 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் பைப்பை திறந்து துவக்கிவைத்தார்.
முன்னதாக குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து சந்தனம் - குங்கும் பொட்டுவைத்து தேங்காய் உடைக்கபட்டு தீபாரதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் உத்திராபதி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர், மச்சழகன், ஊர் பிரமுகர்கள் நமசி. நாகராஜ் திவாஸ்கர் ஊராட்சி செயலாளர் பிரியங்கா, ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி கஸ்தூரிபாய், ஊராட்சிமன்ற உறுப்பினர் ரேவதி தியாகராசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
- மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.
இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.
சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .
இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.






