என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாண்டஸ் புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    நாகை மாவட்ட துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை காணலாம்

    மாண்டஸ் புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    • தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத் துறை மூலம் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக நாகை மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள் என மீன்பிடி தொழிசார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பது மட்டுமில்லாமல் உள்நாட்டு மறறும் வெளிநாட்டு மீன் ஏற்றுமதியும் நடைபெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    Next Story
    ×