திருமருகல் வவ்வலாடி பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் - ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உறுதி

நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்தார்.
ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்தார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூர் ஊராட்சியிலுள்ள, வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

போதிய வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏவிடம் மக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அங்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விரைவில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com