என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளர்ச்சித்திட்ட பணிகள்"
- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
- பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதாக பேட்டி
ஊட்டி,
சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் கரன்சி அங்கன்வாடிமைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் பர்லியார் ரேஷன் கடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து கரன்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிச்சோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் சோலாடாமட்டம் சாலைப்பணிகள், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நூலக சீரமைப்பு பணி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி கிணறு, எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என ரூ.1.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.
பேரட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி சமையல்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்-அப் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் அங்கு படிக்கும் 1-5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி, ஊராட்சியின் பல்வேறு பகு திகளில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.குன்னூர் தாலுகா, உலிக்கல் பேரூராட்சி மற்றும் மேலூர், உபதலை, பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் வளர்ச்சித்தி ட்டப்பணிகளை ஆய்வு செய்து அங்கு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை பார்வை யிட்டோம்.குன்னூர் அடுத்த பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மோகனகு மாரமங்கலம், ஆறுமுகம், பர்லியார் ஊராட்சி தலைவி சுசீலா, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்
- முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை நகராட்சி க்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. திமுக துணைப்பொது செயலாளரும், நீலகிரி எம்.பி. யுமான ஆ.ராசா கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ், நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்தானூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சேங்கை ஊரணி தூர்வாருதல், படித்துறை கட்டும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை கட்டும் பணி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சிவயலில் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.6.13 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்பு பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அனுமந்தக்குடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.
கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள், குடும்ப நல முகாம்கள் நடந்தன. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மேலும் இளையான்குடி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குடும்ப நல முகாம்களில் எவ்வித சிரமுமின்றி, விண்ணப்பங்கள் வழங்கவும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சாலை கிராமத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றிய பொது நிதி 2022-23-ன் கீழ் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டு மானப்பணிகள் தொடர்பா கவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
மேலும் இளையான்குடி பகுதியில் குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகா தாரம்) விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) பெருமாள்சாமி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியாண்டி, இளை யான்குடி பேரூராட்சித் தலைவர் நஜீமுதீன், இளை யான்குடி வட்டாட்சியர் கோபிநாத், இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
- வெம்பக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
- இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை யூனியன் எதிர்கோட்டை கிராம நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
ஆலங்குளம் கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மருத்துவமனையில், அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். உயர்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் கலெக்டர் மருத்து வர்களை அறிவுறுத்தினார்.
கல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் லட்சியம் குறித்து கேட்டறிந்து, ஆசிரியர்களிடம் இடைநிற்றல் மாணவர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் பள்ளி கல்வியை தொடர தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
குண்டாயிருப்பு ஊராட்சியில் கனிமவள நிதி திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.128.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அலுவ லர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை வட்டம், மேட்டுக்காட்டில் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வரும் முதல்கட்ட அகழாய்வு குழிகளையும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, 2-ம் கட்ட அக ழாய்வு பணி நடைபெற இருக்கும் இடம் குறித்து கேட்டறிந்தார்.
வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான ஆதார் இணைப்பு, வேளாண் கணக்கெடுப்பு, இ-அடங்கல், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு, நீர்வரத்து, வரத்து கால்வாய், மதகுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பயன்பெறும் பாசன நிலங்கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதியில், தீபாவளி பண்டிகைக்கு என நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட குறைவாக வசூல் செய்யப்படும் என உறுதியளித்தார்கள். அதன்படி தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் வராத அளவிற்கு தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இப்பொழுது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில் 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.10,000 வரை திரும்ப பெறப்பட்டு, மக்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தின்போதும், பொங்கல் பண்டிகையின்போதும் இவ்வாறு நிகழா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
- தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
- திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
- ஆய்வின் போது மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் நாராயணம்பாளையம் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநருமான மகேஸ்வரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, ஏரியின் நீர் வரத்து கால்வாயினை சுத்தமாக பராமரிப்பு செய்திடவும், மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஓ.ராஜபாளையம் ஊராட்சி, சிவசக்தி நகர் முதல் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை அவர் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.12.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டும் பணியினை பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ராமாபுரம் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலகவுண்டம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு மற்றும் சுண்டல் ஆகியவற்றின் தரத்தை ருசி பார்த்தார். விடுதியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சமையலறை சுகாதாரமான முறையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளனவா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (திருச்செங்கோடு) மகாலட்சுமி, டேவிட் அமல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (மல்லசமுத்திரம்) அருண்குமார், ரமேஷ் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து 4 அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்து றையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அதிகாரி ழயகளுடனான ஆய்வு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மேலாண்மை இயக்குநர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவின்குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் , சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, டபிள்யூ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், செட்டியார்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிவகாசி மாநகராட்சி.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள், ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகள் என அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட சாலை வசதி, குடிநீர், சுகாதாரம், நீர்த்தேக்க தொட்டிகள், பஸ் நிலையம், பேவர் பிளாக், பாதாள சாக்கடை, மயானம், குடிநீர் குழாய் சீரமைத்தல், அனைவருக்கும் வீடு, பூங்கா மேம்பாடு, கூட்டுக்குடிநீர் திட்டம், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாநகராட்சி ஆணையர்கள், மாநகர பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், மண்டல செயற்பொறியாளர்கள், நகராட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்