search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறுவுறுத்தல்படி ஒருங்கிணைந்த கல்வி துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் அலுவலகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் அம்சேந்திரன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சமூக நல விரிவாக்க அலுவலர் தையல் நாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறதொடர்பு பணியாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×