search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa memorial day"

    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
    • மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சின்ன கடை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் இணை செயலாளர் சசிகலா, துணை செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் ஐ.ஓ.பி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் குமார் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கிட்டு, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத

    பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.

    • கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.
    • அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.

    முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.

    பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்.
    • கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் அமைதி பேரணியை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 5-ந்தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அமைதி பேரணியும் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும். கழகமும் மக்களும் நம் பக்கம் தான் என்பதை மக்கள் மன்றத்திற்கு உணர்த்த வேண்டும். லட்சக்கணக்கில் அணி திரண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ஒரு கூட்டம் வெள்ளிக்காசுகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது. நாம் மட்டும் தான் அமைதியாக செயல்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றி வாய்ப்பை வெல்லப்போகிறோம் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், பி.வைரமுத்து, மகிழன்பன், ரெட்சன் அம்பிகாபதி, ரஞ்சித்குமார், எம்.எம்.பாபு கிருஷ்ணன், ஜேகே ரமேஷ், பி.எஸ்.சிவா,சதீஷ், அச்சுதன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் குருமோகன், இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், இளைஞரணி இணைச்செயலாளர் ஜூனியர் எம்.ஜி.ஆர்., மீனவர் அணி செயலாளர் கோசு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், சிவகங்கை கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேர்ந்த புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ள உள்ளனர்.
    • ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

    ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர்.

    இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு டி.டி.வி. தினகரன் தலைமையில் தொண்டர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். #Jayalalithaa #JayaMemorial #TTVDhinakaran
    சென்னை:

    ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் வந்து கலந்து கொண்டனர்.

    டி.டி.வி. தினகரன் அண்ணாசாலை பகுதிக்கு வந்த போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர். திறந்த ஜீப்பில் தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் மெரீனா கடற்கரை நோக்கி புறப்பட்டது. ஜீப்பில் தினகரனுடன் நிர்வாகிகள் அன்பழகன், பழனியப்பன், பி.வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தமிழன் ஆகியோர் சென்றனர்.


    தொண்டர்கள் கட்சி கொடிகளை ஏந்தியவாறு அமைதியாக நடந்து சென்றனர். வாலாஜா சாலை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வழியாக கடற்கரை காமராஜர் சாலைக்கு சென்றது. அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    அமைதி பேரணி மெரினாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதற்காக போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தனர். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையாக சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary #TTVDhinakaran
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என்று கனிமொழி எம்.பி. டுவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
    சென்னை:

    கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
    ×