என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை.
மயிலாடுதுறையில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவிப்பு
- அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சின்ன கடை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் இணை செயலாளர் சசிகலா, துணை செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் ஐ.ஓ.பி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் குமார் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கிட்டு, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story






