ஜெயலலிதா நினைவு தினம்

ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு நகர செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு நகர செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Published on

ராமநாதபுரம்

மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத

பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com