என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollution Prevention"

    • விஷவாயு கசிவின் காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
    • பிளாஸ்டிக் தவிர்த்தல், பொது போக்குவரத்து பயன்படுத்துதல் மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம். வெளிப்பாளையம் தனியார் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமை படை சார்பில், தேசிய மாசு தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    1984ம் ஆண்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் கார ணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மாசு தடுப்பில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் சுற்று ச்சூழல் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், பொது போக்குவரத்து பயன்படுத்துதல், மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக தலைமை ஆசிரியரும் தேசிய பசுமை படை பொறுப்பாளருமான பானுதாசன் வரவேற்புரை ஆற்றினார்.

    உதவி தலைமை ஆசிரியை டி.ராஜேஸ்வரி நன்றி கூறினார். மாசுக்கட்டுப்பாடு குறித்த துண்டு பிரசுரங்கள் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

    ×