search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அரிசி கஞ்சி வழங்கல்
    X

    நாகை மருத்துவமனையில் வள்ளலார் தர்மசாலை நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி கஞ்சியை வழங்கினர்.

    நாகை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அரிசி கஞ்சி வழங்கல்

    • நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சி.

    நாகப்பட்டினம்:

    நாகை வள்ளலார் தர்ம சாலை, வள்ளலார் கருணை குழு, நாகூர் சித்திக் சேவை குழுமம், அருட்கஞ்சி குழு ஆகியவைகள் இணைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வருகைதரும் பொது மக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சியை இலவசமாக வழங்குகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக இச்சேவையை செய்துவரும் இவர்கள் 1000 நாட்களை கடந்தும் இலவச சேவையை செய்து வருகின்றனர்.

    அரிசியுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், ஓமம், தேங்காய்பால், கீரை வகைகள், பூண்டு, இஞ்சி, உள்ளிட்ட 14 பொருட்களை சேர்த்து இலவசமாக வழங்கப்படும் அரிசி கஞ்சியை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்து செல்கின்றனர்.

    நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கருணை யுள்ளம் கொண்டோரின் நிதி பங்களிப்பு காரணமாகவே இது சாத்தியமாகி இருப்பதாகும் தொடர்ச்சியாக இந்த சேவையை செய்வோம் என்று தெரிவித்தனர்.

    நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆயிரம் நாட்களை கடந்துள்ள வள்ளலார் அமைப்பினரின் இலவச கஞ்சி ஊற்றும் தொண்டு சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×