search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான செஸ் போட்டி
    X

    செஸ் போட்டி நடைபெற்றது.

    மாநில அளவிலான செஸ் போட்டி

    • 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 436 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ- மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9 முதல் 19 வயது வரையிலான 436 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பிரிவுகளில் நடந்த போட்டிகளை அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    செஸ் கழக மாநில இணை செயலாளர் பாலகுணசேகரன், தலைவா் விஜயன், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் அருண்குமார் உட்பட பயிற்சியாளர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    அகரம் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி வரவேற்றார். செஸ் கழக இணை செயலர் மணிமொழி நன்றி கூறினார்.

    Next Story
    ×