search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலுகா"

    • சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் வஞ்சிப்பாளையம் கிராமம், தாராபுரம் தாலுகாவில் கொக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் இடுவாய் கிராமம், உடுமலை தாலுகாவில் ஆமந்தக்கடவு கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமம் ஆகியவற்றுக்கு அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் மங்கலப்பட்டி கிராமத்துக்கு முத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் மைவாடி கிராமத்துக்கு நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் கோடங்கிப்பாளையம் கிராமத்துக்கு காரணம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது.

    அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், நகல் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.
    கீழக்கரை

    கீழக்கரை தாலுகா தாசில்தார் சரவணன் கூறியதாவது:-

    கீழக்கரை வட்டத்திலுள்ள 26 வருவாய் கிராமங்களுக்கு 1431 ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் (ஆய்வு) உதவி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.   

    பட்டா மாறுதல், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமான குறைபாடுகளை  மக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்.  நாளை (1-ந்தேதி) திருஉத்தர கோசமங்கை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 2-ந்தேதி கீழக்கரை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 3-ந்தேதி திருப்புல்லாணி உள்வட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    ×