search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை தாலுகா அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக திறக்காமல் இருக்கும் பொதுமக்கள் ஓய்வு அறை
    X

    தக்கலை தாலுகா அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக திறக்காமல் இருக்கும் பொதுமக்கள் ஓய்வு அறை

    • திறந்து வைக்க தே.மு.தி.க. வலியுறுத்தல்
    • மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது தக்கலை தாலுகா அலுவலகம்.

    இந்த தாலுகா அலுவலகத்தை சுற்றி வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், கிராம அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஓய்வெடுக்க போதுமான அறைகள் எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு 2002 வருடத்தில் உள்ள அப்போைதய கலெக்டர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது வரைக்கும் திறக்கபடவில்லை.

    வருவாய் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ள வில்லை. இக்கட்டிடத்தை உடனே பொதுமக்கள் நலன் கருதி திறக்க வேண்டும் என தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் தக்கலை தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் ஓய்வறையை திறக்காவிடில் தே.மு.தி.க. சார்பில் திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×