search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pumps"

    • பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற முன்னேற்பாடுகள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கடந்த ஆண்டு கனமழையின் போது நாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், கடந்த ஆண்டு அதிக அளவு தண்னீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இம்முறை அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    1077, 04365 251992, 8438669800 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் எதிரே கடற்கரையில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது.

    இது பற்றிய தகவலின் அடிப்படையில் சோலை நகர் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் லாஸ்பேட்டை நாவற்குளம் சினேகன் நகரை சேர்ந்த சம்பந்தம் (வயது 68) என்பது தெரியவந்தது. புதுவை அரசு அச்சகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சம்பந்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பின்னர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×