search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசைப் பகுதியில் தேங்கியுள்ள  மழைநீரை அகற்ற வேண்டும்
    X

    திட்டச்சேரியில் குடிசை பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர்.

    குடிசைப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும்

    • மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

    அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.

    இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-

    கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-

    தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×