என் மலர்
நாகப்பட்டினம்
- அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார்.
- அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. இந்த சரணாலய வனச்சரக அலுவலகத்தில் உள்ள வனத்துறையினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, அறிவுரையின்படி நடைபெற்றது.
வேதாரண்யம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு நாகை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் தலைமை தாங்கினார்.
அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார். வனச்சரக அலுவலர் ஓய்வு சுப்பையா நாகப்பட்டினம் வன உயிரின கோட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தமிழ்நாடு வன சட்டம் 1882 மற்றும் 1972 இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம், அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி அளித்தனர்.
- 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
- கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.
இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
- நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.
- இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
- அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.
நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் நாளை 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- தென்னம்புலம், கரியாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம்,ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 17- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பக நாதர் குளம்,இடும்பவனம் தொண்டியக்காடு,
தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்கா ரன்புலம், கருப்பம்புலம, கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடை யான், குரவ ப்புலம் ,தென்ன ம்புலம், கரியாப்ப ட்டினம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.
- கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
- கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.
இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.
புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் -நாகை சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ரூ.3 கோடியே 69 லட்சத்தில்கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது .
நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொ)மதியழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயமுருகையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
- மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நாகப்பட்டினம்:
தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலோடு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடுகின்ற வகையில் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கெளதமன அறிவுறுத்தலின்படி,நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான.
இரா.மாரிமுத்து தலைமையில் நாகை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாகை *நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், தோழர்கள் மூத்தமுன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்.
- நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான தென்னரசு தொடங்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வர்த்தக சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் செல்வராஜ், அரிவையார் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, கவிதா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் சபரிகிருஷ்ணன், சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல், ஆஸ்துமா, நீரிழிவு இருதய, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
- அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் அறிவுரைப்படி, தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதலில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வியை ஒவ்வொரு கிராமங்களாக சென்று வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள இயலாத உடல்நிலை அல்லது விருப்பப்படாத சூழலில் கணவனே தாமாக முன்வந்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது.
இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறும்போது:-
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு மிகவும் எளிய சிகிச்சை முறை மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவரால் 3 நிமிடங்களில் செய்யப்படுகிறது.
இதனால், வாழ்வில் எவ்வித தடையுமில்லை, பக்கவிளைவுகள் ஏதுமில்லை, எப்போதும் போல் கடின உழைப்பை மேற்கொள்ளலாம், சிக்கனமான சிகிச்சை என்பதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், அளவான குடும்பத்தை அமைத்திட அரசு உதவுவதோடு ஊக்கத்தொகை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகிறது என்றார்.
- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
- பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால் கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
- நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
- அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-
ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?
ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...
மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு
ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்
ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...
மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.
ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா
மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு
ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...
மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்
இவ்வாறு உரையாடல் நீளுகிறது.
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.






