என் மலர்
நாகப்பட்டினம்
- மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.
- 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ் தலைமையில் நடைபெற்றது.
வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார். விழாவில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கோயம்புத்தூர், நாகை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 11 நிறுவனங்கள் 421 பேரை நேர்காணல் செய்து 171 பேருக்கு பணி ஆணையையும், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்வாதார தொகுப்பு நிதி வங்கி கடன் மூலம் ரூ. 36 லட்சத்துக்கான காசோலையையும் கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர்.
விழாவில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் செந்தில்குமாரி உள்பட ஒருங்கிணைப்பாளர்களும், பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அனைவரையும் மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாலன் நன்றி கூறினார்.
- பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
- கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி ஊர்வலம் வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது.
வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.
பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.
இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேராலயம் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
வேளாங்கண்ணி சுற்றுலா வந்த பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது
- இந்த ஆண்டு கடலை சாகுபடியில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம், பெரியகுத்தகை ,செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது .ஒரு சில இடங்களில் மழை காலத்திற்கு முன்பே விதைகடலை போடப்பட்டு அவைகள் முளைத்து பூ பூத்த நிலையில் விழுந்து இறங்குவதற்கு வசதியாக மண் அணைக்கும் பணியும் நடைபெற்றது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சீராக தொடர்ந்து பெய்யும் என்று நம்பி நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் திடீரென்று வழக்கத்தைவிட குறைவான அளவு மழை பெய்ததால் தற்போது கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.
கடலை சாகுபடி செய்து 20 முதல் 40 நாட்கள் ஆன நிலையில் குளம் குட்டையில் இருந்து தண்ணீர் வைக்க வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.
இதனால் கடலை சாகுபடிக்கு கூடுதல் செய்வு ஏற்படுகிறது எனவிவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கடலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உர தட்டுபாடு, பூச்சி தாக்குல், தண்ணீர் பற்றா குறையால் என்ஜீன் வைத்து தண்ணீர் இறைப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு, ஆள் சம்பளம் கூடுதல் என பல்வேறு செலவுகள் அதிகரிப்பால் இந்த ஆண்டுகடலை சாகுபடி எதிர்பார்த்த லாபம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
- ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.
ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.
இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- 6 மாதங்களை கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 மாதங்களைக் கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து ரேஷன் பொருட்களை தூக்கி வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அங்காடி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பைரவரின் அவதார திருநாளையொட்டி நேற்று பைரவருக்கு பால், இளநீர், திருநீறு, நெய், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார்.
- அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. இந்த சரணாலய வனச்சரக அலுவலகத்தில் உள்ள வனத்துறையினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, அறிவுரையின்படி நடைபெற்றது.
வேதாரண்யம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு நாகை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் தலைமை தாங்கினார்.
அனைவரையும் வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார். வனச்சரக அலுவலர் ஓய்வு சுப்பையா நாகப்பட்டினம் வன உயிரின கோட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தமிழ்நாடு வன சட்டம் 1882 மற்றும் 1972 இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம், அட்டவணைப்படுத்தப்பட்ட தடிமரங்கள் வனத்துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சி அளித்தனர்.
- 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
- கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.
இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
- நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.
ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.
- இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
- அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.
நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் நாளை 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- தென்னம்புலம், கரியாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம்,ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 17- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பக நாதர் குளம்,இடும்பவனம் தொண்டியக்காடு,
தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்கா ரன்புலம், கருப்பம்புலம, கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடை யான், குரவ ப்புலம் ,தென்ன ம்புலம், கரியாப்ப ட்டினம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.






