என் மலர்
நாகப்பட்டினம்
- வீரமணி மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
- மன வேதனை அடைந்த வீரமணி விஷம் குடித்தார்.
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் தோப்பு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் வீரமணி (வயது 35) கூலித்தொழிலாளி.
இவருடைய மனைவி தையல்நாயகி (35). வீரமணி மதுகுடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனவைி கோபித்து கொண்டு புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீரமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வருகை தந்த, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, நாகூர் நகருக்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் அதற்கேற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மேலும் நாகையில் அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பது, சட்டக்கல்லூரி தொடங்குவது, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது, திருமருகல் தனி தாலுகா அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து, பொதுக் கணக்குக் குழு தலைவரிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ மனு அளித்தார்.
இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைக்கும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்தார்.
- தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமை குறித்தும் ஆய்வு.
- நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம்.
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா, டாக்டர். இறைவாணி, ஆய்வாளர் ப்ரீத்தி, மணி வண்ணன்வரலாற்றுப் பயணம் பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் அருங்காட்சியக பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினர் ஆகியோர் நாகூர் தர்கா வருகை புரிந்து நாகூர் தர்காவின் தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமையினை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம். இதற்க்கு அத்தாட்சி நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுகள் என பாராட்டினர்.
நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப் நாகூர் தர்கா சிறப்பினை பற்றி விளக்கினார். உடன் போர்டு ஆப் டிரஸ்டிகள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகூர் தர்கா கந்தூரிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
- கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
- பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் ஓதி, மனமுறுகி காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிகொண்டனர்.
பின்னர் உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர்.
சகலசௌபாக்கியம் வேண்டி கோவில் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தது, அனைவரையும் பக்தி மனத்தில் ஆழ்த்தியது.
- தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.
- பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையூறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பாக தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
நாகூர் தர்காவுக்கு வரும் யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும்.
குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுங்கள். தங்களது காலணிகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள். தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள். குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.
தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.தர்கா குளத்தில் உணவு பொருட்களை, குப்பை களை போடக்கூடாது. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.
தர்காவில் பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.
தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள்.
அவரச குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு 96774-10786, 98424-41404 அனுப்பவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.
- மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, அங்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார்.
குறிப்பாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவம னையில் ஆய்வு செய்த அவர், மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.
மேலும், நாகூர் தர்கா அலங்காரவாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பதிவேட்டை ஆய்வு செய்தார். மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நாகை நகர்மன்ற தலைவர்மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- குடிசை பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து விவரங்கள் சேகரிப்பு.
- வாழ தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்பு.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்ப டுகிறது.
சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்ற வற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு,வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது.
அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- படிப்பை இடை்நிறுத்தம் செய்த மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள வடமழைராஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசியர் ராஜேந்தின் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, துணைத்தலைவர் சபினிஸ்வரி, ஆசிரியர் கருணாநிதி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரவீனா, பிரகதீஸ்வரன் ஆகிய மாணவர்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றது தெரியவந்தது. உடனே, அவர்களின் பெற்றோரிடம் பேசி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
- காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
- 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் காக்கழனி கடுவையாற்று பாலம் அருகே கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக்கால் திரு.பட்டினம் போலகம், புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மகன் பிரவீன்குமார் (வயது22) என்பதும் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை.
- ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி மோட்டாண்டிதோப்பில் உள்ள சீயோன் பிரார்த்தனை மையத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் சபை போதகர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். நாகை சீயோன் பேராலய தலைமை பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினர்.
முடிவில் சின்னசாமி நன்றி கூறினார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.






