என் மலர்
மயிலாடுதுறை
- எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உள்ளன.
- புகைப்பட கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், காலை உணவு, புதுமைப்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட திட்டப்படங்கள் விளக்கத்துடன் இடம்பெற்றிருந்தன.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள், மீண்டும் மஞ்சப்பை, புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உள்ளன.
இந்த புகைப்பட கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
- மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
- பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி தெற்கு வீதி ச.மு.இ நடுநிலைப்பள்ளியில் 127-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் நாகராஜன், பொன்.பூங்குழலி முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சி.பாலமுருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் பங்கேற்று பேசினார். 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரி–யர்கள் மனோரஞ்சிதம், தையநாயகி, குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டு, பரிசுகள் வழங்கி கெளர வித்தனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது
பட்டதாரி ஆசிரியை ஶ்ரீப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.
- விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு தரங்க சாலையில் அமைந்துள்ள மதுரை வீரன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு ஜெயராஜ் கோகுல் சுரேஷ் பாஸ்கர் ராஜேந்தர் ஆகியோர் விழா குழுவினர்களாக தலைமை ஏற்றனர். இதில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார் சோமசுந்தர் தலைமையில் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்தது.
மேள தாளங்கள் முழங்க கருடன் வட்டமிட பக்தர்கள் ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷங்கள் எழுப்ப வானவேடிக்கையுடன் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மதுரைவீரன், மகா மாரியம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கிராமங்களில் இணையதள வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாதாள சாக்கடை வழிந்தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செம்பனார்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும்.
விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
வருகிற ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அப்போது தான் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்–படும்.
குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.
கிராமங்களில் இணையதள வசதி தடை–யின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும்.
மயிலாடு–துறையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வழிந்–தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் போனஸ் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
- தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார்.
வட்டசெயலாளர் பாலு வரவேற்றார்.
இணை செயலாளர் முருகவேல், முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கே.மாரிமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவேண்டும், பொங்கல் போனசை ௧௦ ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முடிவில் வட்டபொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை.
- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், கருவாழக்கரை ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மன் கோவில் தெரு, மருத்தூர் வடக்குதெரு, சிவன்கோவில் தெரு, குளத்துமேட்டு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மயிலாடுதுறை-பூம்புகார் செல்லும் கருவாழக்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனால் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.
தரங்கம்பாடி:
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் செறுதியூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகப்பட்டினம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் தலைமையில் மருத்துவர்கள் அன்பரசன் கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் தர்மராஜ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முகாமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இதுவரை இந்த தடுப்பூசி அனைத்து கிராமம் மற்றும் நகர் புறப்பகுதிகளில் போடப்படுகிறது .
இதற்காக சுமார் 40 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு போடப்படுகிறது.
கால்நடை வளர்ப்போம் தங்களின் அனைத்து கால்நடை இனங்களுக்கும் கட்டாயம் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் கால்நடை களுக்கு வெயில் மட்டும் மணி நேரங்களில் வேகமாக பரவும் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.
தடுப்பூசி போடாமல் இருந்தால் நோய் ஏற்பட்டால் மாடுகளின் வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் கொப்பளம் மற்றும் புண் ஏற்படும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாது.
மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்படும் சினை மாடுகள் கன்று வீழ்ச்சி ஏற்படும் நோயுற்ற மாடுகளின் பால் இளங்கன்றுகள் குடிப்பதால் கன்றுகள் இறப்பு ஏற்படும். பொதுமக்களின் வேலை திறன் பாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மாடுகள் சில நேரம் இறப்புகள் கூட ஏற்படும்.
எனவே கால்நடை வளர்ப்புக்கு தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஜோதிலட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் முருகன், ராஜ் சிவரஞ்சனி, கயல்விழி மற்றும் உதவியாளர்கள் உஷா, மூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி அளித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி நெடுஞ்செழியன் துணை தலைவர் சவீதா கணேசன் ஆகியோ செய்தனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.
- வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது
சீர்காழி:
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிப்பு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர்
சிவக்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லாதவர்கள் அதிவேகமாக செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் என கண்டறிந்து.
அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி நகர்பகுதியில் 30 வாகனங்களுக்கு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000, லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டுவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்கள் என ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
- ஒரு மாணவனுக்கும், ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூரில் ஒரு தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சின்னங்குடியில் இருந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வேனில் அழைத்து சென்றனர்.
வேன் மயிலாடுதுறை அருகே கிடங்கள் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு, ஒரு ஆசிரியருக்கு மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.
அவர்களுக்கு ஆக்கூரில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவிகள் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேனில் சென்ற மற்ற மாணவர்கள் யாரும் காயம் அடைய வில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
- தீ வேகமாக சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பலானது.
- பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து தொடுவாய் செல்லும் சாலை ஓரத்தில் சீர்காழியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கீற்றுக் கொட்டகை உள்ளது.
காலை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து காற்று வீசும்போது பனை மரத்திலிருந்து தீ வேகமாகச் சென்று கொட்டகையில் பட்டு கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது.
இதில் கொட்டகைக்குள் இருந்த உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆயின.
தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் யாரோ சில இளைஞர்கள் வந்து அங்குள்ள பனை மரத்திற்கு தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டதாகவும், பனை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவி கொட்டகையில் பட்டு கொட்டகை தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியை ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் சீர்காழி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் 12- வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கல்லூரியில் உள்ள நூலகம், வணிகவியல் துறை, அறிவியல் துறை, கணிதத்துறை வகுப்புகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி நிறைவடைந்து கல்லூரி படிப்பில் எந்த துறையை தேர்வு செய்து படிப்பது.
வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து கல்லூரி படிப்பில் சேர்வது உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்க ங்கள் அளித்தனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, பிரபாகரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






