என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alms Giving"

    • விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு தரங்க சாலையில் அமைந்துள்ள மதுரை வீரன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்திற்கு ஜெயராஜ் கோகுல் சுரேஷ் பாஸ்கர் ராஜேந்தர் ஆகியோர் விழா குழுவினர்களாக தலைமை ஏற்றனர். இதில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார் சோமசுந்தர் தலைமையில் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்தது.

    மேள தாளங்கள் முழங்க கருடன் வட்டமிட பக்தர்கள் ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷங்கள் எழுப்ப வானவேடிக்கையுடன் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மதுரைவீரன், மகா மாரியம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் பசியாற்றுவதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • புதிய எந்திரத்தில் பவுர்ணமியையொட்டி பூஜைகள் போட்டு உணவு சமைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பசியாறுவதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த அரும் பெரும் பணியில் சிறு பங்களிப்பாக அன்னதானம் சமைப்பதற்காக பல வருடங்களுக்கு முன் அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையினர் வழங்கிய நீராவி சமையல் எந்திரம் (ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் முதல் பணி இது) லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்து வலுவிழந்தது.

    அதன் பொருட்டு கோரக்க சித்தர் ஆசிரமத்திற்கு புதிதாக ஒரு சமையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    அந்த புதிய எந்திரத்தில் பவுர்ணமியையொட்டி பூஜைகள் போட்டு உணவு சமைக்கப்பட்டது.

    அதனை கோரக்கசித்தர் ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். ஜீவானந்தம் பூஜையுடன் துவங்கி வைத்தார்.

    அறங்காவலர் கிருஷ்ணன் உடனிருந்தனர்.

    இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய ஆசிரம நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த பணியினை முன்னெடுத்த ஸ்ரீ அறுபடை குடும்பத்தை சேர்ந்த குமரகுருபரன், செல்வ கணேஷ், தியாகராஜன், ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ×