என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • இப்பகுதியில் வசித்து வரும் அரியவகை புள்ளி மான்கள் இரை தேடி வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.
    • தப்பியோட வழி இல்லாமல் சிக்கிய அரியவகை புள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை, தேத்தாக்குடி, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் அரியவகை புள்ளி மான்கள் வசித்து வருகிறது. அவ்வப்போது இரை தேடி வயல் பகுதிக்கு வரும் மான்கள் வழி தவறி கிராமத்திற்குள் வந்து விடுகிறது.

    இவ்வாறு பாகசாலை கிராமத்திற்கு உள்ளே வழி தவறி வந்த மானை அப்பகுதி நாய்கள் துரத்தி யுள்ளது. தப்பி ஓட வழி இல்லாமல் சிக்கிய அரிய வகைபுள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் விரை ந்து வந்த சீர்காழி வனத்துறை அலுவலர்கள்புள்ளி மானின் உடலைமீட்டு வனப்பகுதியில் புதைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன.
    • சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்ட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கோவில் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளதுஇங்கு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதி களை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலு க்கு வருகிறார்கள்.

    இந்தநிலையில்டைர க்டரும், நடிகர்விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்தி ரசேகர் அவரது மனைவி ஷோபா ஆகியோர் நேற்று இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவிலின் குருக்கள் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கணேசன்சிவாச்சா ரியார் செய்தியிருந்தார்.

    • விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அலகு குத்தி கொண்டு பாதயாத்திரையாக கோவிலை வந்தடைந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியதை தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை வள்ளலார்கோயில் ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த ஆனதாண்டவபுரம் ரோட்டில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில் 31-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவில் காவேரி ஆறு வடக்கு கரையில் எழுந்தருளி அம்பாள் மட்டும் கரகமும் விரதமிருந்த பக்தர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் அலகு குத்தி கொண்டு பாதயாத்திரையாக கோவில் வந்தடைந்தனர். கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

    இதில் குலதெய்வ குடும்ப த்தார் பாண்டுரங்கன், நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், நகரமன்ற உறுப்பினர்கள் கல்யாணி ரகு, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், விழாக்குழுவினர் மற்றும் ஆலய அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர்.
    • அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதால் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் ஊராட்சி பொன்னுகுடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி பரிமளா. 2 நாட்களுக்கு முன்பு நடந்த மாதாகோவில் திருவிழாவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.தேர் திருவிழாவின் போது சிலர் மது அருந்தி விட்டு தகராறு செய்தனர். இது ஆன்மீக நிகழ்ச்சி, ஜெபத்துடன் இருக்குமாறு பரிமளா மகன் கேட்டுள்ளார். நீ என்ன கேட்பது என கூறி கோயில்பிள்ளை மகன் சக்கிரியாஸ் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.

    ராஜீ, மோகன், சத்யராஜ், தர்மராஜ், நெப்போலியன் சின்னதுரை இவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பரிமளாவையும் தாக்கி மானப்பங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பரிமளா மற்றும் மகன், உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    மேலும் அவர்களை ஊருக்கு உள்ளே விடாமல் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செம்பனார்கோவில் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். நடவடிக்கை எடுத்தால் தான் நாங்கள் ஊருக்கு போக முடியும் என்ற அச்சத்தில் மயிலாடுதுறையிலேயே தங்கியுள்ளனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.
    • வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

    அதன் பின்னர் அண்ணாதுரை கூறுகையில், தற்போது450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த், உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வேளாண் இயக்குனர் அண்ணாதுரை கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப்பயிர், நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த போது வயலில் இறங்கி சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர்.
    • அரசு சுதந்திரமாக நேரடி நெல் விதைப்பு பாதுகாப்பு வழங்ககோரியும், ஏராளமான விவசாயிகள் மற்றும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வது தொடர்பாக விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேலை இழக்ககூடும் என்ற காரணத்தால் கடந்த திங்கட்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே 144 தடை உத்தரவு அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் காவல்துறை பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த போது வயலில் இறங்கி சேதப்படுத்தி போராட்டம்' நடத்திய விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், நேரடி நெல் விதைப்பு செய்ய அரசு தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும்

    தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையில் விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரசு சுதந்திரமாக நேரடி நெல் விதைப்பு பாதுகாப்பு வழங்ககோரியும் ஏராளமான விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் பேரிகார்டுகளை கொண்டு தடுத்து நிறுத்தினர்.

    • ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கல்யாணரங்கன் (எ) பாலாஜி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சேகரன், வட்டார செயலாளர்கள் இளம்வழுதி, கண்ணன், பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க சேகர் வரவேற்றார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளது. உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே நேரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி எதிர்க்கிறது. 8 மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம். அவர்கள் நிரந்தரமாக பணியாற்றுவார்கள். தேவையில்லாத தற்காலிக ஆசிரியர் பணி வேண்டாம். இத்திட்டம் அக்னி பாத் திட்டத்தை விட இது மோசமானது.

    ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இளநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், அகில இந்திய பொது குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், நல்லாசிரியர் ராஜசேகர், இடைநிலை ஆசிரியர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உறவினர் மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த குமரவேல் (வயது 38). அவரது மகள் சாய்சக்தி (3), உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமரவேல், சாய்சக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரவேலுவின் உறவினர் மகனான நிதிஷ்குமார் என்ற சிறுவன் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

    பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர்.
    • மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர் மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக், பாஸ்கரன், ஜெயந்திபாபு, கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர். மேலும் மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் நகராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காத்திருப்பு போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் படி வேலை வழங்கிட வேண்டும்.
    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் அடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் படி வேலை வழங்கிட வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, அரசு மருத்துவர் கௌசிகா முன்னிலை வகித்தனர்.

    இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 வீதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி வீட்டில் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் உறவினர்கள் வர மறுத்தாலும் அரசு ஆம்புலன்ஸ் நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு தேவையான முழு மருத்துவ உதவியும் செய்து அதற்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

    இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து கண்காட்சி முகாமில் இடம் பெற்றிருந்தது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
    • பயணிகளின் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொருளாக உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடு துறை மற்றும் சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரபேருந்துகள் இயக்கப்ப ட்டுவருகின்றன.

    இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள், வியாபாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளின் தாக த்தை தீர்க்க தனியார் அமைப்பு மூலம்தண்ணீர் தொட்டி சுமார் 10ஆண்டு களுக்கு முன்னர் கட்ட ப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீர் தொட்டி பயனற்று காட்சி பொரு ளாக உள்ளது.இதனால் பயணிகள் தாகம் தணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    முன்பு புதிய பஸ் நிலையத்தில் அம்மா வாட்டர் விற்பனை ரூ10க்கு இருந்துவந்ததால் ஏழை, எளியோரும் அவரசதாகத்திற்கு அம்மா வாட்டர் வாங்கி பயன்படுத்தி வந்தநிலையில் அவையும் கடந்த பல மாதங்களாக விற்பனை இல்லாமல் மூடப்பட்டுகிடப்பதால் ரூ.20க்கு கொடுத்து தண்ணீர் பாட்டில் பயணிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

    ஆகையால் பொதும க்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொ ண்டுவர வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    ×