என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.
    • இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது.

    சீர்காழி:

    சீர்காழியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர்சுவாமிநாதன், ஒன்றிய அமைப்பாளர் பூபதிவசந்தன் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் நாகமுத்து வரவேற்றார்

    கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் பங்கேற்று சிறப்புறையாற்றினார்.தொடர்ந்து சீர்காழி சட்டைநாதர்சுவாமி தேவஸ்தான கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று பேசுகையில், நாம் காலம், காலமாக நமது வழிப்பாட்டு முறையை மீட்கவும், பாதுகாக்கவும் போராடும் நிலை உள்ளது.

    ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.ஆனால் இங்கு பலஅரசியல் வாதிகள் ஆன்மிகவாதிகளை பற்றி எதைவேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். இந்துக்களுக்கு இந்து முன்னணி இயக்கமும், இந்து மக்கள் கட்சி இயக்கம் போன்ற இயக்கங்கள் தான் உண்மையாக இருக்ககூடியது.

    இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது. அரசு என்பது கோயில்களைபாதுகாத்து நல்லவழிபடுத்த இருக்கவேண்டுமே தவிர, இடையூறு ஏற்படுத்தகூடாது. பல கோயில்கள் வழிபாடு இல்லாமல் இருக்கின்றன.

    கொரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டும், அடக்குமுறைக்கு உள்ளானது இந்துஆலயங்களும், ஆலய வழிபாட்டு முறைகள் தான். நமது சமயத்தின் பல்வேறு வகையான கொள்கைகளை உள்ளடக்கியது. பட்டினபிரவேசத்திற்கு இந்து முன்னணிதான் முழுமூச்சாக முதலில் குரல் கொடுத்தது. இந்து கோயில்களின் வழிபாட்டிற்கு மட்டும் தான் அறநிலையத்தறையிடம் அனுமதி கேட்கும் நிலை உள்ளது. தமிழகத்தின் வழிபாட்டு முறை உலகத்திற்கே வழிகாட்டு முறையாக இருக்கிறது.கோயில்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.

    ஆலய வழிபாட்டில் இன்னும் சுதந்திரம் அடையவேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு நாம்ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் பாஜக நகர தலைவர் முருகன், விஎச்பி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் இந்துஅமைப்பினர் திரளாக பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ்பி. நிஷா மேற்பார்வையில் 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

    • எருக்கூர் புறவழிச்சாலை பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் திருவாரூரிலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனையில் காயம்அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க தலைமைமருத்துவரிடம் அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற வாக்குசாவடிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சீர்காழி புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை திரும்பி சென்றார்.அப்போது எருக்கூர் புறவழிச்சாலை பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் திருவாரூரிலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த உசைன், செல்லதங்கம், செரினாபானு ஆகிய 3பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவ்வழியாக சென்ற கலெக்டர் இரா.லலிதா இதனை பார்த்தவுடன் தனது காரினை நிறுத்திவிட்டு, நேர்முக உதவியாளரின் (ஊரக வளர்ச்சி) காரில் ஏற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தொடர்ந்து அரசு மருத்துவமனையில் காயம்அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க தலைமைமருத்துவரிடம் அறிவுறுத்தினார். கலெக்டரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார்.
    • வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி, குமரன்கோயில் வடக்கு வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி மங்கையர்கன்னி. இவர்களது இளைய மகள் கிருத்திகா. இவர் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார்.

    அரசு பொதுத் தேர்வில் 591 மதிப்பெண் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார். வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனைப்படைத்த மாணவி கிருத்திகாவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

    • விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார்.
    • 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சேகர் குறுவை தொகுப்பு திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். விழாவில்சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று 33 விவசாய பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 1 ஏக்கருக்கு யூரியா, 45 கிலோ டிஏபி, 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வீதம் ரசாயன உரத்தை வழங்கினார். சீர்காழி வட்டாரத்தில் 6500 ஏக்கருக்கு சுமார் 7100 விவசாயிகளுக்கு இலவசமாக ரசாயன உரம் வழங்கப்படவுள்ளதாகவும், 10 ஏக்கருக்கு சிறுதானிய தொகுப்பும், 75 ஏக்கருக்கு பயறு தொகுப்பும், 20 ஏக்கருக்கு எண்ணை வித்து தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர். விழாவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரிமா, ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், தி.மு.க. நிர்வாகி முருகன் பங்கேற்றனர்.

    • சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.
    • இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கழுமலையாற்று தண்ணீர் மூலம் திருத்தோணி புரம், சிவனார்விளாகம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கொண்டல், வள்ளுவக்குடி, அகணி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பாசனவசதி நடைபெற்று வருகிறது. சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது. சீர்காழி நகர் பகுதி மற்றும் அகணி, நந்தியநல்லூர், கொள்ளிட முக்கூட்டு ஆகிய பகுதியில் கழுமலையாற்றில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவுநீர் விடப்படுகிறது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்ப டுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி மற்றும் நகர் பகுதிகளில் அனைத்து குப்பைகளையும் கழுமலையாற்றில் கொட்டப்படுவதால் பாசனஆறு பாழடைந்து வீணாகிறது. அகணி ஊராட்சி நந்தியநல்லூர் பகுதியில் கழுமலையாற்றில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் விடப்பட்டும் மிகவும் மோசமாக சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படித்துறையும் உடைந்து பயன்படுத்திடமுடியாத சூழலில் உள்ளது.ஆகையால் பொதுப்பணித்துறையினர் களஆய்வு செய்து கழுமலையாறில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும், பிளாஸ்டிக்உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்ப டுவதை தடுத்திடவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
    • விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவியர்க–ளுக்காக பள்ளி விடுதிகள் 15, கல்லூரி விடுதிகள் 4 என மொத்தம் 19 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த 4 கல்லூரி விடுதிகளில் 3 மாணவியர்கள் விடுதி, 1 மாணவர் விடுதி, மேலும் 15 பள்ளி விடுதிகளில் 8 மாணவியர்கள் விடுதி, 7 மாணவர்கள் விடுதி ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவியர்களும். அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிளுக்கு கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச்சார்ந்த மாணவ-மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து–க்கொள்ள–ப்படுவார்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவி களுக்கும்உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்த–ப்பட்ட விடுதிகாப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொ ள்ளலாம்பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள்கல்லூரி மற்றும் பள்ளிவிடுதிகா ப்பாளர், காப்பாளினி களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.7.22க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைக ளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும்வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்க ப்படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையவாம். இவ்வாறு கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    • ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியங்களில் செம்பந்தனிருப்பு, காரை மேடு, கீழசட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

    கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம், நீளம் அகலத்தை ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து காவளம்பாடி பகுதியில் 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டார், பின்னர் காவளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி யில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அப்பள்ளியின் பழமையான கட்டிட இடிபாடுகளை அகற்றி விரைவில் பள்ளியை சீரமை ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பள்ளியை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விழந்திட சமுத்திரம் ஊராட்சியில் பாதரக்குடி கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பேபர் பிளாக் சாலையை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைராஜ், ரமணி ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
    • கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் பாண்டி ச்சேரி உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுருக்குமடி வலை தொழில்' நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொழிலை அனுமதிக்க மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீனவ கிராமத்தினர் மனு அளித்தனர்.

    மீனவர்கள் அளித்த மனுவில், 2004ம் ஆண்டு முதல் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் இத்தொழில் நடந்தது.

    கடந்த 2020ம் ஆண்டு தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

    சுருக்குமடி வலை தொழில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைபெ றுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுருக்குமடிவலை தொழில் நடைபெறவில்லை.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளா தார ரீதியாகவும் மனஉ ளைச்சலுக்கு உட்பட்டு வாழ வழியில்லாமல் உள்ளோம். மற்ற மாவட்டங்களில் உள்ள சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் நமது மாவட்ட கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறைகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் மீன்பிடி தொழில் செய்வோம். சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்ஷினி முதலிடமும், சவுமியா இரண்டாமிடமும், ஐஸ்வர்யா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாமிதா பானு முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் இரண்டாமிடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீன திருமடத்தால் நடத்தப்படும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தர்ஷினி (474/500) முதலிடமும், சவுமியா (472/500) இரண்டாம் இடமும், ஐஸ்வர்யா (468/500) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உமாமகேஸ்வரி (583/600) முதலிடமும், கங்கா (553/600) இரண்டாம் இடமும், ரெஜீனா (544/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாமிதா பானு (575/600) முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் (460/600) இரண்டாம் இடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் (459/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியி ன் ஆட்சி மன்ற குழுத்த லைவர்ராஜேஷ்,செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், ஆதீன பொது மேலாளர் கோதண்ட ராமன், பள்ளி முதல்வர் ஜெகதீ ஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ}மாணவியரை தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
    • மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது இதனை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் காரை க்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழக எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அந்த வகையில் காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உள்ள திருக்கடையூரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

    அவர் கூறுகையில் காரைக்காலில் காலரா பரவி வருவதால் காரைக்காலை சுற்றியுள்ள நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து அமைச்சர் மற்றும் துணை செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும் வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன் இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    மேலும் காரைக்காலை சுற்றியுள்ள மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நம்மிடம் போதிய மருந்து கையிருப்பு வார்டு வசதிகள் உள்ளன. காரைக்காலில் பணிபுரிபவர்கள் தமிழக பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகள் மேற்கொண்டுள்ளோம்.

    நடமாடும் மருத்துவக் குழு மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டு பிளாக்குகளிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்து தேவை இருப்பின் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    • மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். 

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் இவரது மகன் மகாதேவன் (53) இவரது மனைவி அமுதா (37) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளாக கூறப்படுகிறது.

    மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில் இரவு மனைவியிடம் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். தடுத்த மனைவியை அரிவாளால் வெட்டை முயன்றபோது. அதனை பறித்து மனைவி, கணவனை கழுத்தில் வெட்டியுள்ளார்.

    இதில் சம்பவ இடத்தி லேயே மகாதேவன் உயிரி ழந்தார். பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்குசென்று கணவனைகொன்று விட்டதாக சரணடைந்து ள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து ள்ளனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுடன், கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    • கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பதுடன் 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும் ஆகியவற்றிற்கு உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு (2 பணியிடங்கள்) மாதம் ரூ.9000- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.

    மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமணம் செய்யப்படும்போது 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் (http://mayiladuthurai.nic.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் . அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமஞ்சனவீதி, திருஇந்தளுர், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.07.2022 ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக–த்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×